பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆரோக்கியமாக இல்லை என்று ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. அவர் கூட்டத்தைப் புறக்கணித்ததாக கூறப்படும் நிலையில் பிரசாந்த் கிஷோர் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். "நிதிஷ் குமார் ஆரோக்கியமாக இல்லை. அதனால்தான் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளார். மிகவும் ஏழ்மையான மாநிலமான பீஹாரின் முதல்வர், வளர்ச்சி சார்ந்து நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்து கொண்டு உள்ளார். அவர் பீஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற பேரம் பேச சென்றுள்ளார். ஒரு பொதுவான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் உடல் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை எடுக்க வேண்டும்.

ஆனால், அவருடைய பெயர் கூட நினைவில் இல்லாத மாநில முதல்வருக்கு அத்தகைய எதுவும் தேவையில்லை. பீஹாரில் நிதிஷ்குமாருக்கு ஆதரவு இருப்பதால் பாஜக அவரை முதல்வராக வைத்துள்ளது. நிதிஷ் குமாரை தேர்தல் வரை முதல்வராக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் என்றால், அவர் அடுத்த கட்சிக்கு இடம் மாறி விடுவார்" என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.
இதையும் படிங்க: பீஹாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..! நிதீஷ் குமாருக்கு அவ்வளவு பயமா? உசுப்பேற்றிய ராகுல்..!
இதையும் படிங்க: பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!