வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கு இடையே பதற்றம் நிலவியது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிப் முனீர் தான் முக்கிய காரணம். 1971ல் வங்கதேசம் உருவாக காரணமாக இருந்ததே இந்தியா தான். ஆனால் இன்று வங்கதேசம், பாகிஸ்தானின் பேச்சைக்கேட்டு இந்தியாவிற்கு எதிராக மாறிவிட்டது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது முதல் தற்போது வரை, இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டு தலங்கள், வீடுகள், சொத்துகள், உடமைகள் சேதம் அடைக்கின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என , முகமது யூனுஷ் தலைமையிலான அந்நாட்டின் இடைக்கால அரசு உறுதியளித்த போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை. மாறாக, தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்து மத அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: உங்கள் நாட்டில் சிறுபான்மையினர் உரிமைகள் மீது கவனம் செலுத்துங்கள்.. வங்கதேசத்தை விளாசிய இந்தியா..!

இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடன் அவர் விரிவாக எடுத்துரைத்தார். பார்லிமென்டின் கூட்டத்தொடரிலும் இந்த பிரச்னை எதிரொலித்தது. காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய போது, வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு, மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு அளவிடமுடியாததாகும். இந்திய வங்கதேசத்தின் பொருளாதாரப் பரிவர்த்தனைகள் நன்றாக நடந்து கொண்டிருந்த வேளையில் மாணவர் போராட்டத்தை மதக் கலவரமாக மாற்றி சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறின. வங்கதேசத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கு அங்குள்ள இந்துக்களை மிகவும் பாதிப்படையை செய்துள்ளது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசும், அதேபோல இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களையும் வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார். இதற்காக ராணுவ ஒத்துழைப்புக்கு வங்கதேசம், சீனாவை அணுக வேண்டும் என்றும் சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பு குறித்து விவாதிக்கத் தொடங்க வேண்டும் என்றும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே யூனுஸ் நண்பர் இன்னொருத்தர் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்துடன் சேர்த்து சர்ச்சைக்குரிய வரைபடத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.

முகமது யூனுஸ் நாட்டின் நலனை மறந்து அவர் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எடுப்பார் கைப்பிள்ளை போல் செயல்படுகிறார். மேலும் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்குச் சென்ற முகமது யூனுஸ், அங்குள்ள தொழிலதிபர்கள் மத்தியில் பேசும் போது வடகிழக்கு மாநிலங்கள் குறித்து சர்ச்சை கிளப்பினார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி, அவை கடல் பகுதியை அடைய முடியாது.
கடலுக்கு பாதுகாப்பாக வங்கதேசம்தான் உள்ளது என்று தெரிவித்திருந்ததார். இப்படி இந்தியாவுக்கு எதிராக வங்கதேசத்தை தூண்டி விடும் முக்கிய வேலையை பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தான் பார்க்கின்றன. யூனுஸ் சுதாரித்தால் அவருக்கும் வங்கதேசத்துக்கும் நல்லது என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: நிலைமை படு மோசம்.. 5,000 வீரர்கள் ராஜினாமா செய்ய முடிவு.. பதற்றத்தில் கையை பிசையும் பாகிஸ்தான்..!