ஜம்முவில் உள்ள நக்ரோட்டா ராணுவ மையத்தில் மர்ம நபர் ஒருவருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர் காயமடைந்துள்ளார். ஒயிட் நைட் கார்ப்ஸ் ராணுவ பிரிவு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சுற்று வட்டார பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டத்தை கண்டறிந்ததாகவும், உடனடியாக நக்ரோட்டா ராணுவ மையத்தில் வீரர்களுக்கு எச்சரிக்கை அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இது சந்தேக நபருடன் சிறிது நேரம் துப்பாக்கி சண்டைக்கு வழி வகுத்ததாகவும், சென்ட்ரி வீரர் ஒருவருக்கு இந்த சண்டையில் காயம் ஏற்பட்டதாகவும், ஊடுருவியவர்களை பிடிக்க தேடுதல் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருவது அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
இதையும் படிங்க: போர் நிறுத்தம் என்ன ஆனது? பொங்கி எழுந்த உமர் அப்துல்லா... காதை கிழிக்கும் வெடி சத்தங்கள்!!
இதையும் படிங்க: இந்தியா மீது ஓயாமல் ட்ரோன் தாக்குதல்.. பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை துவம்சம் செய்து அழித்த இந்தியா!