காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: தேசிய கொடியை தொட்டதும் முடிவுக்கு வந்த போர்.. இந்தியா- பாக். போர் நிறுத்தத்திற்கு ஸ்டாலின் வரவேற்பு!!

இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனிடையே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இந்தியா வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் தாக்குதல் நிறுத்தம் செய்து 3 மணி நேரத்துக்குள் காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய எல்லையில் 11 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கதுவா, சம்பா, சுந்தர்பானி, உதம்பூர், அக்னூர், நவ்சேரா உள்பட 11 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டு விட்டு பிறகு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, போர் நிறுத்தம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், இப்போது போர் நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுக்க வெடிகுண்டுச் சத்தம் கேட்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போர் நிறுத்தப்பட்டது; ஆனால் இது கண்டிப்பா தொடரும்.. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!!