ஆன்லைன் கேமிங் துறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, ரியல்-மனி கேமிங், ஆப்கள், ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் (Fantasy Sports) மற்றும் கேசினோ-போன்ற ஆப்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. Dream11, MPL, RummyCircle போன்ற ஆப்கள் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளன.
இருப்பினும், இவற்றை சூதாட்டமாக கருத வேண்டுமா அல்லது திறன்-அடிப்படையிலான விளையாட்டாக (Skill-based Games) கருத வேண்டுமா என்பது குறித்து சட்டரீதியான குழப்பங்கள் நீடிக்கின்றன.இந்திய அரசியலமைப்பின் படி, சூதாட்டம் மற்றும் பந்தயம் (Betting) ஆகியவை மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
எனவே, ஒவ்வொரு மாநிலமும் இது தொடர்பாக வெவ்வேறு சட்டங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு.. இது முடியாது போலயே.. தமிழக அரசை விளாசிய சுப்ரீம்கோர்ட்..!!

அதே நேரம் சில மாநிலங்கள் இதை அனுமதிக்கின்றன. இந்த முரண்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை இல்லாத நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஆன்லைன் கேமிங் ஆப்களால் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகள், மனநல பிரச்னைகள், மற்றும் சூதாட்ட பழக்கத்திற்கு அடிமையாதல் குறித்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சில ஆப்கள் மூலம் மோசடிகள் மற்றும் பணமோசடி நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய செயலிகளை கடுமையாக ஒழுங்குபடுத்தக் கோரிய பொதுநல மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த மனு தொடர்பாக ரிசர்வ் வங்கி, அமலாக்க இயக்குநரகம், கூகிள் இந்தியா, டிராய், ஆப்பிள் இந்தியா, ட்ரீம் 11 ஃபேண்டஸி, மொபைல் பிரீமியம் லீக் மற்றும் ஏ23 கேம்ஸ் ஆகியவற்றிடமிருந்தும் உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.
இதையும் படிங்க: எல்லாத்துக்கும் limit இருக்கு... பெருமளவு மக்களை நீக்கினால்... தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் பகிரங்க எச்சரிக்கை!