இந்தியாவுடனான போர் அச்சத்தின் மத்தியில், பாகிஸ்தான் இராணுவத்தின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐ-யின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக், பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவின் மூலம், ஷாபாஸ் ஷெரீப் அரசின் மீது பாகிஸ்தான் இராணுவத் தலைவரின் பிடி வலுவடைந்துள்ளது.

முன்னதாக, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடியின் போது, போருக்கு அருகில் இருந்த பதற்றத்தைக் குறைப்பதில் பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும், பாகிஸ்தானின் என்.எஸ்.ஏ-க்கு இராணுவத்தின் சார்பாகப் பேச அதிகாரம் உள்ளதா? இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இந்தியா புகார் அளித்து வருகிறது. ஆனால் இந்த முறை, பதவியில் இருக்கும் உளவுத்துறைத் தலைவரை நேரடியாக நியமிப்பது இந்த அச்சங்களை நீக்குவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உயிரை கையில் பிடிச்சுட்டு இருக்கணுமா? வெட்கமா இல்லையா? ஸ்டாலினுக்கு இபிஸ் சுளீர் கேள்வி..!

ஜெனரல் மாலிக்கை நியமிக்கும் யோசனை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பிடமிருந்து வந்ததாக ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார். ஏப்ரல் 27 அன்று நவாஸ், ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்ததாகவும், அதில் இந்தியாவுடனான போரைத் தவிர்ப்பதற்கான உத்தி குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், என்.ஐ.ஏ தலைவரின் இந்த நியமனத்தை பாகிஸ்தான் இராணுவம் பேச்சுவார்த்தைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் இராணுவம் முழு கட்டுப்பாட்டை விரும்புகிறது என்பது மிகவும் தெளிவாக உள்ளது என்றும், பாகிஸ்தான் பிரதமர் அதை ஏற்றுக்கொள்ள மிகவும் தயாராக உள்ளார் என்றும் முக்கிய விவகார நிபுணர் ஆயிஷா சித்திக் தெரிவித்தார்.
ஐஎஸ்ஐதலைவர் ஜெனரல் மாலிக் பாகிஸ்தானின் என்.எஸ்.ஏ தலைவராக மாறுவது இந்தியாவிற்கு நல்ல செய்தி. இந்த நியமனத்தில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகும். எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ஜெனரல் மாலிக்கிடமிருந்து வரும் எந்தவொரு திட்டத்திற்கும் பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவு இருக்கும். ஆனாலும், இது இந்தியாவுடனான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் வலுப்படுத்தும்.
இதையும் படிங்க: அரிவாளால் வெட்டி வீசிய ராணுவ வீரர்.. அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்.. உயிருக்கு போராடும் பெண்..!