சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கௌரவத் தலைவர் ஜி.கே .மணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே பாமக நிர்வாகிகள் அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் இச்சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாமக மாநாடு அப்பகுதியில் நடைபெறும் என நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை ஏன் தாமதமாக உள்ளது என தெரியவில்லை. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் தற்போது வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் , அவர்கள் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை.
இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி இணைவு ... உண்மையை போட்டு உடைத்த கணேஷ் குமார்...!
மாவட்டச் செயலாளர் நடராஜர் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், எச்சரிக்கையாக இருங்கள் என காவல்துறையினரே தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதே நிலை மீண்டும் தொடரும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்.
காவல்துறை தரப்பில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேர் முக்கிய குற்றவாளிகள் அல்ல. காவல்துறையினரின் கண் முன்னே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆனால் காவல்துறை அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளது.
கட்சியில் உட்கட்சி பிரச்சனை நிலவும் போது அனைவரும் அமைதியாக தான் இருக்க வேண்டும் ஆனால் அண்ணன் , தம்பியாக குடும்பம் போல பழகிய சொந்தக் கட்சியினரே கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நாட்டில் எங்கும் நடந்திடாத நிகழ்வு இது , கடும் கண்டனத்திற்குரியது என்றார்
இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். யார் மீது கொலை முயற்சி நிகழ்ந்தது என வீடியோ ஆதாரங்கள் இருக்கும் நிலையில், எம்எல்ஏ அருள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இந்திய விடுதலைக்காக காந்தி தலைமையேற்று போராடியது போல சமூக நீதிக்காக தலைமை ஏற்று போராடிய ராமதாஸ் தற்போது வரை பதவியை தேடி போகவில்லை. ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சி, இதனை விரைவில் அய்யா நிரூபித்து காட்டுவார்.
தீய சக்திகள் துரோகிகள் கைக்கூலிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன் என்கிறார் அன்புமணி. அன்புமணி யார் யாரை துரோகிகள், கைக்கூலிகள் , தீய சக்திகள் என குறிப்பிடட்டும். அவர்கள் தானாக விலகிக் கொள்கிறோம். அப்படியாவது அன்புமணி ராமதாஸ் ஒன்றிணைகிறார்களா? என்று பார்ப்போம்.
ராமதாசை சந்திக்க விடாமல் அன்புமணியை எந்த தீய சக்தியும் தடுக்கவில்லை. தந்தையை சந்தித்து உடனிருந்து பயணிக்கிறேன் என கூறுவதை தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம்.
தந்தை மகன் இடையே நிலவும் பிரச்சனையில் அன்புமணி மற்றவர்களை குறை கூறுவது சரியல்ல. ஜி.கே. மணி, தான் கட்சியை இரண்டாக பிரித்து வைத்துள்ளார் என அன்புமணி கூறுகிறார். அருளை சாக்கடை என்று கூறுகிறார். கட்சிக்காக உழைத்தவர்களை அன்புமணி இப்படி வசை பாடுவது வேதனை அளிக்கிறது.
பாமகவின் துரோகிகள் என என்னை குறிப்பிட்டாலும் விலக தயார் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
Visual sent live bag.
இதையும் படிங்க: "இனி பாமகவினர் மீது சுண்டு விரல் பட்டாலும்..." - அன்புமணி, செளமியாவை பகிரங்கமாக எச்சரித்த ராமதாஸ்...!