அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குறதுக்காக இந்தியாவுக்கு எதிரா கடுமையான நடவடிக்கை எடுத்து, இந்திய பொருட்களுக்கு இறக்குமதி வரியை 50%-ஆக உயர்த்தியிருக்காரு. முதல்ல 25% வரி விதிச்சவர், இப்போ இந்தியா ரஷ்யாவோட வர்த்தகத்தை நிறுத்தலைனு ஆத்திரமடைந்து, ஆகஸ்ட் 6, 2025 புதன்கிழமை இந்த வரியை இரட்டிப்பாக்கியிருக்காரு.
இந்த முடிவை இந்திய வெளியுறவு அமைச்சகம் “நியாயமற்றது, ஏத்துக்க முடியாது”னு கண்டிச்சிருக்கு. ஆனா, ட்ரம்ப் இதுக்கு பதிலடியா, “இன்னும் நிறைய இருக்கு, இரண்டாம் நிலை தடைகளை பார்க்கப் போறீங்க”னு மிரட்டியிருக்காரு. இந்த செய்தி இப்போ உலக அரங்கத்துல பெரிய பரபரப்பை கிளப்பியிருக்கு.
நேத்து ஒரு செய்தியாளர் சந்திப்புல, ட்ரம்பிடம், “ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குற பல நாடுகள் இருக்கும்போது, இந்தியாவை மட்டும் ஏன் குறிவைக்குறீங்க?”னு கேள்வி கேட்டாங்க. அதுக்கு ட்ரம்ப், “இந்தியாவுக்கு வரி விதிச்சு 8 மணி நேரம்தான் ஆகுது. இன்னும் என்ன நடக்குதுனு பாருங்க. இன்னும் நிறைய நடவடிக்கைகள் வரும்.
இதையும் படிங்க: ட்ரம்பை சமாளிக்க முடியாமல் திணறுகிறார் மோடி! வெளியுறவு கொள்கையில் பேரழிவு! கார்கே காட்டம்!!
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குற சீனா மீதும் நடவடிக்கை எடுக்கலாம். இரண்டாம் நிலை தடைகளை பார்க்கப் போறீங்க,”னு சூசகமா மிரட்டியிருக்காரு. இது இந்தியாவோட பொருளாதாரத்துக்கு மட்டுமில்ல, உலக வர்த்தக உறவுகளுக்கும் ஒரு பெரிய சவாலை உருவாக்குது.
ட்ரம்போட இந்த முடிவு, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர 50 நாள் கெடு வச்சதோட ஒரு பகுதி. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குற இந்தியா, சீனா மாதிரியான நாடுகள், ரஷ்யாவுக்கு நிதி உதவி செய்யுற மாதிரினு ட்ரம்ப் கருதுறாரு. இந்தியா, “நம்ம 1.4 பில்லியன் மக்களோட எரிசக்தி பாதுகாப்புக்கு ரஷ்ய எண்ணெய் அவசியம்”னு சொல்லி பதிலடி கொடுத்தாலும், இந்த 50% வரி இந்தியாவோட ஏற்றுமதி துறைகளை பெரிய அளவுல பாதிக்குது.

டெக்ஸ்டைல்ஸ், நகைகள், ஆட்டோ பாகங்கள், கடல் உணவு மாதிரியான பொருட்கள் அமெரிக்காவுல விலை உயர்ந்து, இந்தியாவோட $87 பில்லியன் ஏற்றுமதி சந்தை பாதிக்கப்படலாம். இதனால, பொருளாதார வளர்ச்சி 6.5%-லிருந்து 6%-க்கு கீழே சரியலாம், சிறு-குறு தொழில்களில் (MSMEs) வேலை இழப்பு வரலாம்னு பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்குறாங்க.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குற நாடுகளோட பட்டியலில் சீனா முதலிடத்துல (19.25 லட்சம் கோடி ரூபாய்), இந்தியா இரண்டாவது இடத்துல (11.70 லட்சம் கோடி) இருக்கு. துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில் மாதிரியான நாடுகளும் இந்த பட்டியலில் இருக்கு. ஆனா, இப்போதைக்கு இந்தியாவையும், பிரேசிலையும் மட்டும் ட்ரம்ப் குறிவச்சு 50% வரி விதிச்சிருக்காரு. சீனாவுக்கு இன்னும் இந்த அளவு தடைகள் வரல, ஆனா ட்ரம்போட மிரட்டல், சீனாவும் அடுத்த டார்கெட்னு காட்டுது.
இந்தியா இப்போ மத்திய கிழக்கு, அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கலாம், ஆனா செலவு உயரலாம். இந்தியா ஏற்கனவே அமெரிக்காவோட $25,572 கோடி போர் விமான ஒப்பந்தத்தை நிறுத்தி பதிலடி கொடுத்திருக்கு. ஆனா, இந்த வரி மோதல் உலக எண்ணெய் விலையையும், பணவீக்கத்தையும் உயர்த்தலாம்.
இதையும் படிங்க: வண்டி, வண்டியாக கொட்டப்போகும் வரிப்பணம்.. பலகோடி டாலர் வசூல்!! குதூகலத்தில் ட்ரம்ப்..!