மதுரையில் பிறந்து, இப்போ உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளோட முதன்மை செயல் அதிகாரியா (CEO) இருக்குற சுந்தர் பிச்சை, இப்போ உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடிச்சிருக்காருனு செய்தி வந்திருக்கு. இவரோட சொத்து மதிப்பு 2025-ல சுமார் 1.1 பில்லியன் டாலர், அதாவது 9,500 கோடி ரூபாய்க்கு மேல இருக்குனு ப்ளூம்பர்க் கோடீஸ்வரர் பட்டியல் (Bloomberg Billionaires Index) சொல்றது. இது ஒரு நிறுவனத்தை தொடங்காம, ஒரு தொழில்முறை நிர்வாகியா இவ்வளவு உயரத்துக்கு வந்த சுந்தர் பிச்சையோட அசாதாரண பயணத்தை காட்டுது.
சுந்தர் பிச்சை 1972-ல மதுரைல ஒரு எளிய தமிழ் குடும்பத்துல பிறந்தவர். இவரோட அப்பா ரகுநாத பிச்சை, பிரிட்டிஷ் நிறுவனமான GEC-ல எலக்ட்ரிக்கல் இன்ஜினியரா வேலை பார்த்தவர், அம்மா லட்சுமி ஒரு ஸ்டெனோகிராபரா இருந்தாங்க. சுந்தர், தம்பி ஒருத்தரோடு சென்னையில உள்ள இரண்டு அறை வீட்டுல, தரையில படுத்து வளர்ந்தவர். அப்போ குடும்பத்துக்கு டிவி, கார் இல்லை, 12 வயசுலதான் முதல் டெலிபோன் வந்துச்சு.
இந்த எளிமையான பின்னணியில இருந்து, சுந்தர் சென்னை ஜவஹர் வித்யாலயாவுல படிச்சு, பின்னர் IIT காரக்பூர்ல மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் படிச்சு முதல் ரேங்க் வாங்கினார். அப்புறம், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்துல முதுகலை, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துல வார்டன் ஸ்கூல்ல MBA முடிச்சார். ஸ்டான்ஃபோர்டுக்கு போக, அப்பா ஒரு வருஷ சம்பளத்துக்கு மேல செலவு செஞ்சு டிக்கெட் வாங்கிக் கொடுத்தது இவரோட வாழ்க்கையில ஒரு பெரிய திருப்புமுனை.
2004-ல கூகுள்ல சேர்ந்த சுந்தர், Google Toolbar, Google Chrome மாதிரியான முக்கியமான தயாரிப்புகளை உருவாக்கினார். Chrome இப்போ உலகின் நம்பர் ஒன் இணைய உலாவியா இருக்கு. இவரோட தலைமையில Android, Gmail, Google Maps, Google Drive மாதிரியான தயாரிப்புகளும் வளர்ந்தது. 2015-ல கூகுளோட CEO ஆனார்.
2019-ல Alphabet Inc.-னு கூகுளோட தாய் நிறுவனத்தோட CEO ஆனார். 2004-ல கூகுள்ல சேர்ந்த சுந்தர், Google Toolbar, Chrome மாதிரியான தயாரிப்புகளை உருவாக்கினார். Chrome இப்போ உலகின் நம்பர் ஒன் உலாவி. Android, Gmail, Maps, Drive-ஐ வளர்க்க முக்கிய பங்கு வகிச்சார்.

2015-ல கூகுள் CEO ஆனார், 2019-ல Alphabet Inc.-னு கூகுளோட தாய் நிறுவனத்தோட CEO ஆனார். இவரோட தலைமையில Alphabet-ஓட சந்தை மதிப்பு 2023-ல 1 டிரில்லியன் டாலரை (இந்திய மதிப்பு 86.5 லட்சம் கோடி) தாண்டி, 2024 ஏப்ரல்ல 2 டிரில்லியன் டாலரை எட்டியது. இப்போ ஜூலை 2025-ல 2.315 டிரில்லியன் டாலரா இருக்கு, உலகின் ஐந்தாவது மதிப்புமிக்க நிறுவனமா உயர்ந்திருக்கு. AI, கிளவுட் கம்ப்யூட்டிங் துறைகளில் இவரோட தொலைநோக்கு பார்வை முக்கிய பங்கு வகிக்குது.
சுந்தரோட சொத்து மதிப்பு, 2 மில்லியன் டாலர் அடிப்படை சம்பளம், பங்கு விருதுகள், செயல்திறன் போனஸ் மூலமா உருவாச்சு. 2022-ல மட்டும் 226 மில்லியன் டாலர் சம்பாதிச்சார். கலிஃபோர்னியாவுல 40 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடம்பர வீடு, Mercedes Maybach S650 (3.21 கோடி ரூபா), BMW 730 LD (1.35 கோடி ரூபா) இவரோட சொத்துகளில் அடங்குது. மனைவி அஞ்சலி பிச்சை, கெமிக்கல் இன்ஜினியர், இவங்களுக்கு காவ்யா, கிரண்னு இரு குழந்தைகள். எளிமையை விரும்புற சுந்தர், தொழில்முறை பொறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்குறவர்.
மதுரையில் இருந்து உலக கோடீஸ்வரரா உயர்ந்த சுந்தரோட பயணம், கல்வி, உழைப்பு, தொலைநோக்கு பார்வையோட முக்கியத்துவத்தை காட்டுது. இந்திய இளைஞர்களுக்கு இவர் ஒரு உத்வேகம், உலக அரங்கத்துல இந்தியர்களோட திறமையை பறைசாற்றுற ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு