தேசிய கீதம் பாட பலமுறை கூறியும் ஏற்காதது ஏன் எனக் கூறி ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னை அவமதித்து விட்டீர்கள் என கூறி ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நான்காவது முறையாக ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கி உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆளுநர் ரவி தனது உரையைத் தடையின்றி வாசிப்பாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் சட்டப்பேரவை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறி இருந்த நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தாங்க லிஸ்ட்... அமித் ஷா வருகை எதிரொலி... ஆளுநர் ரவியை சந்திக்கும் EPS...!
ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியே சென்ற நிலையில், தேசிய கீதம் பாடாமல் தன்னை அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டிய நிலையில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளதால் சட்டப்பேரவையில் பதற்றமான சூழலை ஏற்பட்டது. ஆளுநர் மரபை மீற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த சபாநாயகர் அப்பாவோ ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை படித்தார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையை தொடங்கினார்.
இதையும் படிங்க: ஜன.20ல் தமிழக சட்டப்பேரவை... ஆளுநர் மாண்பை காப்பார் என நம்புகிறோம்... சபாநாயகர் அப்பாவு பேட்டி..!