கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று கொச்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் விபத்துக்குள்ளான இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தக் கப்பல் இன்று இரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்றும் அதை தொடர்ந்து தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது கப்பலில் 25 பேர் இருந்தனர். அவர்களில் ஒன்பது பேர் உயிர் காக்கும் உடைகளின் மூலம் தப்பித்த நிலையில், மீதமுள்ள 16 பேரை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அரபிக்கடல் ஆப்ரேசன்.. கடற்படை தளபதிக்கு மோடி கொடுத்த உத்தரவு.. அச்சத்தில் உறையும் பாகிஸ்தான்..!

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவை கரை ஒதுங்கும் சமயத்தில் அதன் அருகே மக்கள் யாரும் இருக்க வேண்டாம் என்றும் கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்த பொருளையும் தொட வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது. மேலும் ஏதேனும் அவர்சம் என்றால் 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிவகங்கை கல்குவாரி விபத்து சம்பவம்.. அதிரடி உத்தரவு போட்ட கனிமவளத்துறை..!