தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குறுகிய காலத்தில் அதீத மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மேகவெடிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில குறுகிய காலத்தில பெய்யக்கூடிய அதீத கனமழை ஆகும்.
குறிப்பாக ஒரு மணி நேரத்தில் ஒரே இடத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவானால் அதை மேகவெடிப்பு என்று வகைப்படுத்தப்படுகிறது. அதேபோல இந்த மழைப்பொழிவு பரவலாக ஒரு இரண்டு மூன்று மாவட்டங்களில் பொழியாமல், 20-30 கிலோ மீட்டருக்குள் பதிவானால் அந்த வானிலை நிகழ்வு மேகவெடிப்பு என அழைக்கப்படுகிறது. இயல்பாகவே வட மாநிலங்களில் இது போன்ற மழைப்பொழிவு அதிகப்படியாக நடைபெறும். நம்ம தென்னிந்தியா மற்றும் தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அவ்வப்போது ஒரு சில நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு.
அந்த வகையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பரவலாக கனமலை பதிவானது. ஒரு சில இடங்களில் மிக கனமழை பதிவானது. வெப்பச்சலனம் காரணமாக உருவாகிய மலைமேகங்கள் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும்போது மணலி அருகே கடல் காற்று உள்நுழைந்து அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில அடர் மேக குவியல்கள் உருவாகி மலைப்பொழிவை கொடுத்ததன் காரணமா நிகழ்ந்த மேக வெடிப்பு மழைப்பொழிவு என்று வகைப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாகிஸ்தான்.. பலி எண்ணிக்கை 657 ஆக உயர்வு..!!
வரக்கூடிய மாதங்களில் மழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக இந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்கள்ல குறுகிய காலத்தில் நமக்கு அதித மழைப்பொழிய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை.. உயரும் பலி எண்ணிக்கை.. தொடரும் மீட்புப்பணி..!!