• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்!! மத்திய கிழக்குப் போரில் இணைந்தது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை!

    ஈரானுக்கு எதிரான போருக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு முதல்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி போரில் இணைந்துள்ளது.
    Author By Pandian Sat, 28 Mar 2026 12:56:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Houthis Launch First Ballistic Missile at Israel in Escalating Iran-Israel War – Middle East on Edge

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முதன்முறையாக இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளனர். இந்த அதிரடித் தாக்குதல் மேற்காசியப் பகுதியில் நான்கு வாரங்களாக நீடித்து வரும் மோதலை மேலும் பெரிய அளவில் விரிவடையச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சனாவில் இருந்து ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா சரீ வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் மேற்காசியாவில் பிராந்திய விரிவாக்கத்துக்காக செயல்பட்டு வருகிறது. ‘கிரேட்டர் இஸ்ரேல்’ என்ற பெரிய இலக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    அவர் மேலும் தெரிவித்ததாவது: “நியாயமற்ற, ஒடுக்குமுறை மற்றும் நியாயப்படுத்த முடியாத செயல்கள் உலக ஸ்திரத்தன்மைக்கும், பிராந்திய பாதுகாப்புக்கும், உலகப் பொருளாதாரத்துக்கும் பெரும் தீங்கு விளைவிக்கின்றன. 

    இதையும் படிங்க: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை! ட்ரம்பை கேலி செய்யும் ஈரான்! அப்போ பேச்சுவார்த்தை சும்மாதானா?

    இந்த மோதலை எதிர்கொள்ள முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நின்று, தாக்குதல் நடத்துபவர்களுக்கு பெரிய தோல்வியை ஏற்படுத்த வேண்டும். ராணுவ ரீதியான தலையீட்டுக்கு ஹவுதி அமைப்பு முழுமையாக தயாராக உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்தார்.

    HormuzWar

    இந்த எச்சரிக்கைக்குப் பின்னர், ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனர். இது ஹவுதி அமைப்பு இஸ்ரேல் மீது நேரடியாக நடத்திய முதல் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், பாலத்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏற்கெனவே தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. இதனால் இஸ்ரேல் லெபனானையும் தாக்கியுள்ளது. இப்போது ஹவுதியும் போரில் நேரடியாக இணைந்துள்ளதால், மோதல் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா, லெபனான், ஏமன் உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய பெரும் பிராந்தியப் போராக மாறும் அபாயம் அதிகரித்துள்ளது.

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறு உலக எண்ணெய் விலையை ஏற்கெனவே பாதித்து வரும் நிலையில், ஹவுதியின் புதிய தாக்குதல் உலகப் பொருளாதாரத்துக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என பயப்படுகின்றனர். ஹவுதி அமைப்பு ஏற்கெனவே செங்கடல் பகுதியில் சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போது இஸ்ரேல் மீது நேரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் உரிய பதிலடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்காசியப் பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போர் மேலும் விரிவடைந்தால் அதன் பாதிப்பு உலகம் முழுவதும் உணரப்படும் என பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: மேற்காசிய போர் பதற்றம்! மோடி - ட்ரம்ப் ஆலோசனை!! அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போருக்கு பின் முதல்முறை!

    மேலும் படிங்க
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...!

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    ‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!

    மொபைல் போன்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?

    அரசியல்
    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழக அரசின் அடுத்த மெகா பிளான்... ஒன்றல்ல 5 இடங்களில் அதிரடி... எங்கெல்லாம் தெரியுமா?

    தமிழ்நாடு
    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    #Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    சென்னை அண்ணா சாலை நில மோசடி..!! திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனால் இதுதான் நடக்கும்..!! சசிகலா பரபரப்பு கருத்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share