தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏசி வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நான்கு குடும்பங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்து தீயணைப்புத் துறையினர், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: அதிவேக பயணம்.. பைக் விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாப பலி..!

இந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 அதிகரித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் படுக்காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பகீர் கிளப்பிய ஈரோடு இரட்டை கொலை சம்பவம்..! போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பறந்த உத்தரவு..!