திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' எனப்படும் உயரமான கோபுரத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்றுவது கோயில் நிர்வாகத்தின் நீண்டகால பாரம்பரியமாக உள்ளது. இது 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்றங்களால் அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் அமைந்துள்ளதால், சில இஸ்லாமிய அமைப்புகள் இது தங்கள் மத இடத்தை அவமதிப்பதாக எதிர்த்து வந்தன.
மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீப ஏற்றம் போன்ற பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகளுக்காக அறியப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றம் தொடர்பான ஒரு சிறிய சர்ச்சை, மாநில அரசு, நீதிமன்றம், மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான மோதலாக மாறியது. இதன் மையத்தில் இருந்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பு.

இந்த தீர்ப்பை 'உள்நோக்கமுடன்' கொண்டது என்று குற்றம் சாட்டி, அவரை நீதிபதி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் தொடர்பான தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: பீகார் வாக்கு எண்ணிக்கை... இந்தியா கூட்டணி அதிர்ச்சி... தேஜஸ்வி தொடர்ந்து பின்னடைவு...!
நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமிநாதன் பதவி நீக்கும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வழங்கினர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உள்நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. நீதிபதி சாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியினருடன் இணைந்து நோட்டீஸ் வழங்கி உள்ளது. பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் இணைந்து திமுக எம்பிக்கள் கனிமொழி உள்ளிட்டோர் தீர்மான நோட்டீசை அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்து உடன் பதவி நீக்கம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நானே வரேன்... திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு... விசாரணைக்கு நேரடியாக சென்ற நீதிபதி...!