இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்க நேற்று இரவு பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதை முன்கூட்டியே கணித்து வைத்திருந்த இந்தியா, சாதூரியமாக பதிலடி கொடுத்தது. ஒரே நேரத்தில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் என 3 மாநிலங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் போர் விமானங்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இவை இல்லாமல் 50 ட்ரோன்களையும் இந்தியா மேல் ஏவி விட்டது. எல்லா ட்ரோன்களையும் இந்தியா தவிடுபொடியாக்கி விட்டது.

காஷ்மீரின் நவுஷேரா என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. அவற்றை நம் வான் பாதுகாப்பு கவசங்கள் துல்லியமாக சுட்டு வீழ்த்தின. இப்போது அது தொடர்பான பரபரப்பான வீடியோ காட்சி வெளியாக அதிர வைத்துள்ளது. நம் வசம் இருக்கும் ஏவுகணை தடுப்பு கவசம், வான் பாதுகாப்பு கவசங்களை வைத்து இந்தியா நேர்த்தியாக பாகிஸ்தான் பதிலடியை முறியடித்தது. பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்களை வானிலேயே இடைமறித்து அழித்தது.
இதையும் படிங்க: விடிய விடிய கேட்ட துப்பாக்கி சப்தம்.. தவிடு பொடியான பாக்., திட்டம்.. 50 ட்ரோன்களை வேட்டையாடிய இந்தியா..!

அதோடு பாகிஸ்தானின் போர் விமானங்களையும் இந்தியா சுட்டு வீழ்த்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து தயாரித்த JF-17 ரக போர் விமானங்கள் இரண்டை நம் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நான்காம் தலைமுறை விமானம். ஏற்கனவே இவற்றை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதல் முற்றிலும் முறியடிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் விதம் பற்றி நம் பாதுகாப்பு படை அதிகாரிகள் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை பார்க்கும் போது அப்படியே டிட்டோவாக இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் போல் இருக்கிறது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 1200 மக்களை கொன்றனர். அதே நேரம் சரமாரியான ராக்கெட் குண்டுகளையும் ஹமாஸ் வீசியது.

ஒரே நேரத்தில் 4300 ராக்கெட் குண்டுகளை வீசியது. எல்லாமே நமத்து போன குண்டுகள். கொஞ்சம் கூட வீரியம் இல்லாதவை. நேற்று பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் வீசிய எல்லாமே இப்படி சீப்பான ராக்கெட் குண்டுகள் தான். அவர்கள் நடத்திய தாக்குதல் விதமும் ஹமாஸ் போலவே இருந்தது என்று பாதுகாப்பு படை அதிகாரிகள் வட்டாரம் கூறியது.கடந்த மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் பயங்கரவாதிகளும் ஒன்றாக கூட்டம் போட்டனர். இதில் ஹமாஸ் பயங்கரவாதிகளும் பங்கேற்றதாக தகவல் வெளியானது. இப்போது அவர்கள் ஸ்டைலில் பாகிஸ்தான் தாக்கி இருக்கிறது. எனவே இரண்டுக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ‘ஆபரேஷன் சிந்தூர்’: நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் கூறியது என்ன?