இந்தியா- பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து ஏவுகணைகள் மூலம் பயங்கரவாத முகாம்களை அழித்துள்ளது. அப்போது முதல், பாகிஸ்தானில் பதற்றம் உச்சத்தில் உள்ளது. பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் இந்தியாவைத் தாக்கியது. அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தது.

அதே நேரத்தில், இந்திய ஆயுதங்கள் பாகிஸ்தானுக்குச் சென்று நேரடியாக அவர்களின் இலக்கில் விழுந்தன. இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளின் சிதைவுகளை இந்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதில் மிக முக்கியமான சிதைவுகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட பிஎல்-15இ. ஆனால் இந்த ஏவுகணை சீனாவுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: அடிபட்ட பாம்பாய் சீரும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் நிகழ்த்தத் துடிக்கும் படுபாதகச் செயல்..!

சீன ஏவுகணையின் சிதைவுகளை மீட்டெடுப்பது இன்னும் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இந்த சீன ஏவுகணையின் ரகசியங்களையும் இந்தியா இப்போது அறிந்து கொள்ள முடியும். உந்துவிசை அமைப்பு, தரவு இணைப்பு, செயலற்ற குறிப்பு அலகு உட்பட பல முக்கியமான விஷயங்கள் இந்த இடிபாடுகளில் கிடைக்கப் பெற்றுள்ளன. பிஎல்-15இ என்பது சீன ஏவுகணையின் ஏற்றுமதி பதிப்பு. இந்த ஏவுகணை இரட்டை பல்ஸ் ப்ரொப்பல்லண்ட் ராக்கெட் மோட்டார், ஆக்டிவ் எலக்ட்ரானிக் ஸ்கேன் செய்யப்பட்ட வரிசை ரேடார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த ஏவுகணை மாக் வேகத்தில் 145 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இலக்கை குறிவைக்கும். ஆனால், ஏவுகணை அதன் இலக்கை அடையத் தவறிவிட்டது. சீனா 2011-ல் இதைத் தயாரிக்கத் தொடங்கியது. 2012- அதன் சோதனையைத் தொடங்கியது. அதன் விலை ரூ. 300 கோடி.
A fully intact Chinese PL-15 long-range air-to-air missile was recovered in Hoshiarpur, Punjab—clearly launched from a PAF jet, most likely a JF-17. It failed to detonate. pic.twitter.com/BME3n5blTg
— Amit Malviya (@amitmalviya) May 9, 2025
இந்தியாவின் பல நகரங்கள் இரவில் பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்டன. அதன் பிறகு இந்தியா மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தியாவின் பதிலடியாக, பாகிஸ்தானின் பல நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. அதன் பிறகு அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல நகரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பாகிஸ்தான் இதைச் செய்தே ஆக வேண்டும்: இல்லையென்றால்... இந்தியா இறுதி எச்சரிக்கை..!