சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருவதன் எதிரொலியாக, நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை நடப்பு நிதியாண்டில் சுமார் 36,000 முதல் 38,000 கோடி ரூபாய் வரை நிகர இழப்பைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக பிரபல தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா (ICRA) தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள், சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் விமான எரிபொருள் (ATF) விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் (Operating Expenses) சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை எரிபொருளுக்கே செலவிடப்படும் நிலையில், எரிபொருள் விலை உயர்வு விமான நிறுவனங்களின் லாப வரம்பை நேரடியாகப் பதம் பார்த்துள்ளது.
இதையும் படிங்க: "விலகி வாங்க"..! போதைப் பொருளால் இளைய தலைமுறைக்கு அச்சுறுத்தல்..! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு.!
அதேவேளையில், விமானக் குத்தகை கட்டணம், உதிரிபாகங்கள் பராமரிப்பு மற்றும் சர்வதேச விமான நிலையக் கட்டணங்கள் போன்ற முக்கியக் கட்டணங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரிலேயே செலுத்தப்பட வேண்டியுள்ளதால், இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சி கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அதிகரித்து வரும் புதிய விமானங்களின் வரத்து மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நஷ்டம் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு அதிகரிக்கும் என இக்ரா தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி எங்கே.? இன்றோடு 19 நாள்.!! 600 பேரின் செல்போன் அழைப்புகளை வைத்து ஆய்வு..!!