காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவில் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்த ஏவுகணை தாக்குதல்களை இந்திய பாதுகாப்பு படை முறியடித்துள்ளது. இதையடுத்து மீண்டும் இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்தியாவின் வான்வெளி தடுப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துவிட்டன. இந்தியாவின் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு சுமார் 8 பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தியுள்ளது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்து வந்த 8 ஏவுகணைகளையும் தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தன.
இதையும் படிங்க: பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட தற்கொலை படை ட்ரோன்.. சிக்கி சின்னபின்னமாகி வரும் பாக்.,!!

இதைத்தொடர்ந்து இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. 50க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டன.

இதுமட்டுமில்லாது நேற்றிரவு ஜம்மு கஷ்மீரின் சம்பா மாவட்ட பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவ முயன்றது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நவ்ஷேரா பகுதியில், பாகிஸ்தானின் இரண்டு ட்ரோன்கள் இந்திய இராணுவத்தால் வீழ்த்தப்பட்டன. ஆகாஷ் எனப்படும் இந்திய தயாரிப்பு ஏர் டிபென்ஸ் மிசைல் அமைப்புதான் இந்த தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கு பெரிதும் கை கொடுத்தது.
இதனிடையே இப்படி அறிவிக்கப்படாத போரை பாகிஸ்தான் தொடங்கியுள்ளதால், அந்நாட்டு ராணுவ தளபதியே நினைத்தாலும் எதிர் தாக்குதலிலிருந்த பின் வாங்க முடியாது என்றும் அவ்வளவு சீக்கிரம் இந்திய ராணுவம் விட்டுவிடாது என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீர் விமான நிலையம் மீது பாக். தாக்குதல்... எஸ்400-ஐ பயன்படுத்தி இந்திய ராணுவம் பதிலடி!!