கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த இந்தியா, திடீரென இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகையை அறிவித்திருந்தது.

ஆனால் பாகிஸ்தானே எதிர்பார்க்காத வகையில் அதிகாலை ஒன்றே கால் மணியிலிருந்து 1:35 மணி வரைக்கும் சரியாக 25 நிமிடங்களில் பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்புகளின் 9 இடங்களை இந்தியா ரஃபேல் விமானம் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கி தும்சம் செய்துள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டது இந்தியா. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சீனா வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: பயங்கரவாத முகாம்களின் படங்கள் வெளியீடு..! அம்பலமானது பஹல்காம் தாக்குதலில் பாக். பங்கு..!
இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். தற்போது அங்கு நிலவும் நிலை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இந்த இரு நாடுகளும் சீனாவின் அண்டை நாடுகள். அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்பட வேண்டியது அவசியம். அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை கவலை தருகிறது” என சீன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சுக்கு நூறாக்கப்பட்ட பாகிஸ்தான் பங்கர்கள்..! அலறும் தீவிரவாதிகள்..!