காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது.

ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவை காப்பி அடிக்கும் பாக்., ஏட்டிக்கு போட்டியாக அமைதி குழு அமைத்து காமெடி..!

அதன் பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.இனி பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சும் நடத்த மாட்டோம். அப்படி பேசினால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து மட்டமே இந்தியா பாகிஸ்தானுடன் பேசும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. பிரதமர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் இனி பேசுவோம் என்றார். பின்னர் பிரதமர் மோடி ஆதம்பூர் விமானப்படை தளம் சென்று ராணுவ வீரர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

இந்தியாவைப் பின்பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டு தினங்களுக்கு முன்பு ராணுவ விமான தளங்களுக்கு சென்றார். 2வது முறையாக கம்ரா விமானப்படை தளம் சென்று பாகிஸ்தான் ராணுவ வீரர்களை அவர் சந்தித்தார். அவருடன் துணை பிரதமர் இஷாக் தார், பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், மற்றும் ராணுவ தளபதிகள் உடன் சென்றனர். ராணுவ வீரர்கள் உடனான சந்திப்புக்கு பிறகு, இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால் அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்னையும் இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமும், லடாக் யூனியன் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். அது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் அமைதிப் பேச்சுக்கு வர வேண்டுமானால் காஷ்மீர் பிரச்னை பற்றியும் பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய பிரிவு வெளியிட்டு இருக்கிறது. திட்டமிடப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது என்ற தலைப்பில் ராணுவம் அந்த வீடியோவை பதிவிட்டு உள்ளது.
அதில், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நமது வீரர்கள் துவம்சம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. வீடியோவில் பேசும் ராணுவ வீரர், பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்த ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இது கோபம் அல்ல; பாடம் புகட்டுவதற்கான தீர்மானம். எதிர்காலத்தில் என்றென்றும் இது நினைவில் கொள்ளப்படும். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இது தான் நீதி எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சனம்.. அசோகா பல்கலை. பேராசிரிசியர் அதிரடி கைது..!