காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலானது.

இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்த ட்ரோன்கள் துருக்கி கொடுத்ததாக தெரிய வந்தது. இதை அடுத்து துருக்கியுடனான வர்த்தகத்தை ஆப்பிள் வியாபாரிகள் நிறுத்தினர். மேலும் அங்கு சுற்றுலா செல்ல எடுக்கப்பட்டிருந்த டிக்கெட்டுகள் அனைத்தும் இந்தியர்களால் கேன்சல் செய்யப்பட்டது, அந்த வரிசையில் தற்போது துருக்கியின் செலெபி ஏவியேஷன் எனும் நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் 9 விமான நிலையங்களில் துருக்கியின் செலெபி ஏவியேஷன் எனும் நிறுவனம் சரக்குகளை கையாள்கிறது. இதற்கு பாதுகாப்பு அனுமதி அவசியம். இதனை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
இதையும் படிங்க: சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

இதன் மூலம் தனது பணியை இந்நிறுவனம் இழக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சென்னை, மும்பை உட்பட சுமார் 9 விமான நிலையங்களில் சரக்குகளை கையாள்வது உள்ளிட்ட உயர் பாதுகாப்பு கொண்ட பணிகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் 1958ம் ஆண்டு நிறுவப்பட்டிருக்கிறது. மொத்தம் 3 கண்டங்களில் 6 நாடுகளில் 70 விமான நிலையங்களில் இந்த பணிகளை செய்து வருகிறது. இதில் 15,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வெறுமென பயணிகளின் உடமைகள் மட்டுமல்லாது, விமானம் எங்கு வந்து நிற்க வேண்டும் என்பது உட்பட இந்நிறுவன ஊழியர்கள்தான் வழிக்காட்டுவார்கள்.

மும்பை, டெல்லி, கொச்சின், கண்ணூர், பெங்களூரு, ஹைதராபாத், கோவா மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் இந்நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் மொத்த பங்கில் 10% துருக்கி அதிபர் எர்டோகன் வசம் இருப்பதாகவும் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதில் வேலை செய்யும் ஊழியர்கள் விமானத்திற்கு மிக நெருக்கமா இருப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது என்பதால் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கிளியரன்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. செக்யூரிட்டி கிளியரன்ஸ் மிக முக்கியம். இது இருந்தால் மட்டுமே இந்த பணி மேற்கொள்ள அனுமதிப்படும். இப்போது இதனை மத்திய அரசு ரத்து செய்திருப்பதால், துருக்கி நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அணுக்கதிர் வீச்சு கசிவா? இந்தியா மீது அபாண்ட பழி.. IAEA நெத்தியடி பதில்..!