காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலானது. இதனை மேற்கோள் காட்டி, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீண்டும் ஏற்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதாரமாக இருக்கும் சிந்து நீரை விடுவிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது.
இதையும் படிங்க: இந்திய BSF வீரரை இப்படியெல்லாம் சித்ரவதை செய்தார்காளா? பாக். செய்த கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தடுக்காதவரை இந்த ஒப்பந்தம் மீண்டும் செயல்படுத்தப்படாது என இந்தியா தரப்பிலிருந்து ஏற்கெனவே பலமுறை தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடரப்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தின் மீது பாகிஸ்தான் செலுத்தும் ஆதரவு குறைக்கப்பட வேண்டும்.

பெயரளவுக்கு இல்லாமல் அதை நம்பகத்தன்மையுடன் சாத்தியப்படுத்த வேண்டும். அது செய்யப்படாதவரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடரப்படாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதியை பாகிஸ்தான் காலி செய்வதுதான் காஷ்மீர் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரே விஷயம். அந்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் விவாதத்திற்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாக். ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம்.. இதுதான் காரணம்; பென்டகன் வட்டாரம் தகவல்!!