இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போர்களில் முக்கிய பங்கு வகித்த மிக்-21 போர் விமானங்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் நிரந்தரமாக ஓய்வு பெறுது. பழைய தொழில்நுட்பம் காரணமா இந்த விமானங்களை படையிலிருந்து நீக்கி, புதிய உள்நாட்டு தேஜஸ் மார்க் 1A விமானங்களை இணைக்க அரசு முடிவு செய்திருக்கு. இந்த முடிவு, இந்திய விமானப்படையை நவீனப்படுத்துறதுக்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பா பார்க்கப்படுது.
மிக்-21 விமானங்கள் 1960-களில் சோவியத் யூனியனின் மிகோயன்-குரேவிச் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை. 1963-ல் இந்திய விமானப்படையில் இணைந்த இந்த ஒற்றை எஞ்சின் விமானங்கள், 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் பெரிய பங்கு வகிச்சன. பாகிஸ்தானின் விமானத் தளங்களை தாக்கி, பல விமானங்களை அழிச்சு, இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்தன.
1999-ல கார்கில் போரிலும், 2019-ல் பாலகோட் தாக்குதலின்போதும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனா, கடந்த மே 2025-ல் பாகிஸ்தானுடனான மோதலில், மிக்-21 விமானங்கள் பாகிஸ்தானின் சீனாவின் J-10C விமானங்களாலும், PL-15E ஏவுகணைகளாலும் எளிதாக சுட்டு வீழ்த்தப்பட்டனனு கூறப்படுது.
இதையும் படிங்க: இது 3வது முறை!! யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா!

மிக்-21 விமானங்கள், உலகளவில் 11,000-க்கும் மேற்பட்டவை உற்பத்தி செய்யப்பட்டு, "விமானங்களின் AK-47"னு அழைக்கப்பட்டன. ஆனா, இந்த விமானங்கள் பழைய தொழில்நுட்பத்தை சார்ந்தவை. இதனால, 60 ஆண்டு சேவையில் 400-க்கும் மேற்பட்ட விபத்துகளில் 200-க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக பதிவாகியிருக்கு. இதனால, "பறக்கும் சவப்பெட்டி" மற்றும் "விதவை உருவாக்கி"னு மோசமான பெயர் இந்த விமானங்களுக்கு கிடைச்சது.
இந்திய விமானப்படை, 42 படைப்பிரிவுகளை (Squadrons) வைத்திருக்க வேண்டிய நிலையில், இப்போ 31 படைப்பிரிவுகளை மட்டுமே வைத்திருக்கு. இதனால, மிக்-21 விமானங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனா, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்களின் தயாரிப்பு தாமதமானதால், மிக்-21 விமானங்களை ஓய்வு கொடுக்க முடியாம இருந்தது.
இப்போ, தேஜஸ் மார்க் 1A விமானங்களின் உற்பத்தி துரிதப்படுத்தப்பட்டதால, ராஜஸ்தானின் நல் விமான தளத்தில் இருக்கும் மீதமுள்ள மிக்-21 படைப்பிரிவுகளை செப்டம்பர் 2025-ல் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கு. இந்த முடிவு, இந்திய விமானப்படையை நவீனப்படுத்துறதுக்கு முக்கியமான மைல்கல்லா பார்க்கப்படுது.
மிக்-21 விமானங்கள் பயிற்சி மற்றும் இடைமறிப்பு (Interceptor) பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை பழைய ரேடார்கள் மற்றும் மெக்கானிக்கல் ஸ்கேன் தொழில்நுட்பத்தை கொண்டிருந்ததால், பாகிஸ்தானின் J-10C, JF-17 போன்ற நவீன விமானங்களுக்கு எதிராக போட்டியிட முடியல. இதனால, புதிய தேஜஸ் விமானங்கள், நவீன AESA ரேடார்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளுடன் இந்திய விமானப்படையை பலப்படுத்தும்.
இந்த ஓய்வு முடிவு, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துறதுக்கு ஒரு முக்கிய படியாக இருக்கும். தேஜஸ் விமானங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், "மேக் இன் இந்தியா" திட்டத்துக்கு பெரிய பூஸ்ட் கிடைக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
இதையும் படிங்க: மரண தண்டனையில் இருந்து தப்பினார் நிமிஷா? காட்டுத் தீயாய் பரவும் வீடியோ; மத்திய அரசு விளக்கம்..!