மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்வு செய்யப்பட்டு பெருமை பெற்று வந்தது. ஆனால், 2025 டிசம்பர் இறுதியில் தொடங்கி 2026 ஜனவரி தொடக்கத்தில் உச்சமடைந்த ஒரு கொடூரமான சம்பவம் இந்தப் பெருமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்தூரின் பகீரத்புரா பகுதியில், நகராட்சி வழங்கிய குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பெருந்தொற்று, பல உயிர்களைப் பலிகொண்டது.
இந்தச் சம்பவம் நிர்வாக அலட்சியம் மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.பகீரத்புரா எனும் அடர்த்தியான குடியிருப்புப் பகுதியில், நர்மதா ஆற்றிலிருந்து வரும் குடிநீர் விநியோகக் குழாய் ஒன்று கசிவு ஏற்பட்டது. இந்தக் குழாய், உள்ளூர் போலீஸ் சோதனைச் சாவடியில் கட்டப்பட்ட ஒரு கழிப்பறைக்கு அருகில் சென்றது.
அந்தக் கழிப்பறையின் கழிவுநீர் சரியான செப்டிக் டேங்க் இல்லாமல் நேரடியாக ஒரு குழியில் திருப்பிவிடப்பட்டிருந்தது. இதனால், குழாயில் ஏற்பட்ட கசிவு வழியாக கழிவுநீரும் பாக்டீரியாக்களும் குடிநீரில் கலந்தன. கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்ததால் 11 பேர் உயிரிழந்த நிலையில் 1,400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தூரில் விநியோகிக்கப்பட்டது தண்ணீர் இல்லை, விஷம் என்று கூறினார்.
இதையும் படிங்க: சோனியா, ராகுல் காந்திக்கு மிகப்பெரிய நிம்மதி... நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED தலையில் இடியை இறங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்...!
நிர்வாகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது என்று குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். ஒவ்வொரு வீடும் துக்கத்தால் நிரம்பியுள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். பாஜக தலைவர்கள் ஆணவமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: ஒரே அறையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி... 88 நிமிட காரசார விவாதம்... நடந்தது என்ன?