தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டிய சட்டமன்றமே ரீல்ஸ் வீடியோக்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறதோ என்ற அவல நிலையை ஆளுங்கட்சியினர் உருவாக்கியுள்ளதாகவும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தவெக அரசு அமைந்த குறுகிய காலத்திலேயே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சாடினார். மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாகக் குற்றச் சம்பவங்கள் பெருகி வருவதாகவும், அவற்றில் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களாகத் தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களுமே இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மக்கள் பிரதிநிதிகள் கூடி மக்கள் நலத் திட்டங்களையும் கொள்கைகளையும் விவாதிக்க வேண்டிய புனிதமான சட்டமன்ற அரங்கை தவெகவினர் கேலிக் கூத்தாக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டிய கனிமொழி, சட்டமன்ற நடவடிக்கைகள் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு விளம்பரம் தேடுவதற்காகவே நடத்தப்படுகிறதா என்ற உணர்வை ஆளும் கட்சியினர் உருவாக்கி வருகின்றனர்" எனக் காட்டமாக விமர்சித்தார். மக்கள் மன்றத்தின் மாண்பைக் குலைக்கும் இத்தகைய விளம்பர அரசியலை விடுத்து, தமிழகத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கை உடனடியாகக் கட்டுப்படுத்தவும், குற்றங்களைத் தடுத்து நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!
இதையும் படிங்க: திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!