இந்தியாவின் 14வது துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். அவருடைய பதவி காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் ஒன்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த ராஜினாமா மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடுவில் அறிவிக்கப்பட்டதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை உடல்நலப் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டாலும், மருத்துவ அறிக்கை இல்லாததால் இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. உண்மையாகவே உடல்நிலை பிரச்சினை தான் காரணமா? அல்லது அரசியல் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா செய்தாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஜெகதீப் தன்கர் தலைமையிலான BAC கூட்டத்தில் ஒரு மணி வரை நட்டா கலந்து கொண்டதாகவும், மீண்டும் 4.30 மணிக்கு நடந்த BAC கூட்டத்தில் அவர் பங்கேற்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில், தனது முடிவை மாற்றிக் கொள்ளும் எண்ணத்தில் ஜெகதீப் தன்கர் இல்லை என் தகவல் வெளியானது. இதனுடைய மாநிலங்களவை துணைத் தலைவர் ரிஷிவன்ஷ் தலைமையில் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இதையும் படிங்க: மழைக்கால கூட்டத்தொடர் 2ஆம் நாள் அமர்வு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு...
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை ஏற்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உடல் நலனை காரணம் காட்டி குடியரசு துணை தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் கடிதம் கொடுத்த நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அப்போ பிரதமர் மாற்றமா? ஜெகதீப் தன்கர் விவகாரத்தில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்..!