காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை அமெரிக்க தான் நிறுத்தியது என்று அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இதனை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்று இந்திய வெளியுறவுறத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதையும் படிங்க: சிந்து நீர் ஒப்பந்தம் ரத்தின் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும்... உண்மையை உடைத்த ஜெய்சங்கர்!!

இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெய்சங்கரிடம், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கு (டொனால்ட் டிரம்ப்) நன்றி சொல்வீர்களா? சொல்ல வேண்டுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், இருதரப்பு மோதல் என்பது ராணுவ தளபதிகளுக்கு இடையே நடந்த நேரடி தொடர்பு மூலம் முடிவுக்கு வந்தது.

சண்டை முடிவுக்கு வந்த நாளின் காலையில் நாங்கள் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களை தாக்கினோம். அதேபோல் வான் பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க செய்தோம். எனவே, போர் நிறுத்தத்திற்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? . இந்திய இராணுவத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால் இந்திய இராணுவ நடவடிக்கை தான் பாகிஸ்தானை பணிய வைத்து மோதலை நிறுத்த தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்க வைத்தது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிரம்பை யாரு பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டது? இந்தியா - பாக். போர் விவகாரத்தில் ராகுல் கேள்வி!!