காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் நம்நாட்டை கண்டித்தன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இருநாடுகளுடனான வர்த்தக உறவை நம் நாட்டை சேர்ந்த தொழில் நிறுவனத்தினர் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.

அதேபோல் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்வதை நம் நாட்டை சேர்ந்தவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்திய – பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது. அதேபோல் துருக்கியும் ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது. அந்த வரிசையில் நெதர்லாந்தும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந் பாகிஸ்தானின் கடற்படைக்கு அதிக ஆயுதங்களை வழங்கியது. இந்த நிலையில் நெதர்லாந்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றார்.
இதையும் படிங்க: பொறுப்புக்கு புறம்பான செயல்... மேலும் ஒரு பாக். தூதரக அதிகாரி வெளியேற கெடு!!

அங்கு அவர் நெதர்லாந்தின் பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது எக்ஸ்தள பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். அதில், இன்று ஹேக்கில் பிரதமர் டிக் ஸ்கோப்பை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன், பயங்கரவாதத்திற்கு எதிரான நெதர்லாந்தின் உறுதியான நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தேன். இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அவரது உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன். இந்த இலக்குகளை அடைய இருநாடுகளும் கடுமையாக உழைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே 22 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஐரோப்பாவுடன் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானை விட இந்தியா தான் நெதர்லாந்துக்கு முக்கியமானதாக விளங்குகிறது. இதனை நினைவு கூறும் வகையில் ஜெய்சங்கர் நெதர்லாந்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நெதர்லாந்தை இந்தியா பக்கம் இழுத்து விட்டால் பாகிஸ்தான் கடற்படை துறையில் நெதர்லாந்துக்கு பதில் மாற்று நாட்டை பாகிஸ்தான் அணுக வேண்டியிருக்கும். மேலும் இது அவர்களுக்கு பெரும் சிக்கலாக அமையும் என கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு செக் வைக்கவே ஜெய்சங்கர் நெதர்லாந்துக்கு சென்றுள்ளது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: பொற்கோவில் குறித்து வெடித்த புதிய சர்ச்சை.. இந்திய ராணுவம் விளக்கம்!!