இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அதனை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தவிடு பொடியாக்கியது. அப்போது சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் உள்ளிட்டவற்றை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க்குதல் நடத்திய நிலையில், அந்த தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. இதற்கிடையே பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் வளாகத்திற்குள் இந்தியா வான் பாதுககாப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

முன்னதாக பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நடவடிக்கை தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி லெப்டினட் ஜெனரல் டி சுன்ஹா வெளியிட்ட ஒரு கருத்து விவாதத்தை கிளப்பியது. அதாவது, பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் ஆயுதங்களை கொண்டு சென்றதாகவும், பொற்கோவில் தலைமை நிர்வாகிகள் இதற்கு அனுமதி கொடுத்ததாகவும் கூறினார். மேலும், பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் பொற்கோவிலின் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

இதை வைத்தே டிரோன்கள் வருவதை நாங்கள் எளிதாக கண்டுபிடித்தோம். வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும் மத தலங்களையும் பாகீஸ்தான் குறிவைத்தது என்று கூறியிருந்தார். ராணுவ அதிகாரியின் இந்த கருத்துக்கு சீக்கிய மத அமைப்பின் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழு(SGPC) மற்றும் சீக்கிய மத அதிகாரிகள் விளக்கம் ஒன்றை அளித்து இருந்தனர். அதில், இதுபோன்ற எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை என கூறியிருந்தனர்.

மேலும், விளக்குகளை அணைக்க மட்டுமே அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டதாகவும், இதற்கு கோவிலின் புனிதம் பாதிக்கப்படாமல் முழு ஒத்துழைப்பு அளித்தாகவும் கூறினர். இந்த நிலையில், இது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதுக்குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொற்கோவிலுக்குள் ஏடி கன்களை பயன்படுத்தியதாக சில ஊடக தகவல்கள் பரவுகின்றன. வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் மட்டும் இன்றி வேறு எந்த வான் பாதுகாப்பு ஆயுதங்களும் பொற்கோவில் வளாகத்திற்குள் பயன்படுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வர்த்தகத்தை பற்றி பேசவே இல்லை... ட்ரம்ப் கருத்தை அதிகாரப்பூர்வமாக மறுக்கும் இந்தியா!!