இந்தியாவுடனான போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்டதால், அந்நாட்டு பல்கலைக்கழகத்துடன் செய்ய இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதராக செயல்பட்ட துருக்கி நாடு, அந்நாட்டுக்குத் தேவையான ட்ரோன்கள், வெடிபொருட்களை வழங்கியும், ஆதரவாக அறிக்கையும் வெளியிட்டது.
இதையும் படிங்க: 'ஆப்ரேஷன் சிந்தூர்': எக்கச்சக்க தீவிரவாதிகள் பலி.. அமைச்சர் கிரண் ரிஜிஜு போட்டுடைத்த உண்மை..!
இதையடுத்து, துருக்கி மீது இந்தியர்களுக்கு வெறுப்பு உருவானது. கோடை விடுமுறையில் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்ல இருந்த ஏராளமான இந்தியர்கள் சுற்றுலாவை ரத்து செய்து, வேறுநாட்டுக்கு தங்கள் பயணத்தை மாற்றினர். அது மட்டுமல்லாமல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், துருக்கி பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இருந்தது.

ஆனால், போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்த துருக்கியின் செயலால் அதிருப்தி அடைந்த டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம், துருக்கி பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் வெளியிட்ட அறிக்கையில் “ தேசபாதுகாப்பு, தேச நலன்களைக் கருத்தில் கொண்டு துருக்கி பல்கலைக்கழகத்துடன் செய்ய இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்திவைக்கிறோம். அதேசமயம், ஆராய்ச்சி, கற்பித்தலில் தொடர்ந்து உதவியாக,பரஸ்பரம் செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளது.

உலகளவில் 78 பல்கலைக்கழகத்துடன் ஜேஎன்யு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. துருக்கியில் உள்ள மலாட்டயா நகரில் உள்ள இன்னோனு பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய ஜேஎன்யு முடிவு செய்திருந்தது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தில் தற்போது அந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இது தவிர இந்தியர்கள் கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்டதைக் கண்டு அதிருப்தி அடைந்த இந்தியர்கள் துருக்கிக்கு சுற்றுலாப் பயணத்தை ரத்து செய்தனர். துருக்கி, அஜர்பைஜனுக்கு டிக்கெட் ரத்து செய்தது 250மடங்கு அதிகரித்துள்ளது.

மேக்மைட்ரிப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ கடந்த ஒரு வாரமாக இந்தியர்கள் மிகுந்த உணர்ச்சியுடன இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி இருந்ததால் அதிருப்தி அடைந்த இந்தியர்கள் அசர்பைஜனுக்கும் துருக்கிக்கும் டிக்கெட் முன்பதிவை 60% ரத்து செய்தனர். ஒருவராத்தில் டிக்கெட் ரத்து 250 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசப்பற்று, ராணுவ வீரர்களை மதிக்கும்போக்கு, ஆகியவற்றால் துருக்கியை இந்தியர்கள் புறக்கணிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிரட்டும் பாக்., சொல்லி அடிக்கும் இந்தியா..! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை..!