காஷ்மீர் எல்லையில் மறுபடியும் பதற்றம் தலைதூக்கியிருக்கு. பூஞ்ச் மாவட்டத்துல, கட்டுப்பாட்டுக் கோடு (LoC) பகுதியில பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதா தகவல் பரவியது. இதுக்கு இந்திய ராணுவம் கடுமையா பதிலடி கொடுத்ததா சொல்லப்பட்டுச்சு.
ஆனா, இந்திய ராணுவம் இதை திட்டவட்டமா மறுத்து, “எல்லையில எந்த போர் நிறுத்த மீறலும் நடக்கல. எல்லாம் வதந்தி,”னு தெளிவுபடுத்தியிருக்கு. இந்த சூழல்ல, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்சினையை மறுபடியும் கையில எடுத்து, இந்தியாவுக்கு எதிரா புது உருட்டு உருட்டியிருக்கார்.
ஆகஸ்ட் 5, 2019-ல இந்தியாவோட பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த 370-வது பிரிவை ரத்து பண்ணி, ஜம்மு-காஷ்மீரையும் லடாக்கையும் யூனியன் பிரதேசங்களா அறிவிச்சது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிச்ச பாகிஸ்தான், ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 5-ஐ ‘யூம்-இ-இஸ்தெசல்’ தினமா கொண்டாடி, இந்தியாவுக்கு எதிரா குரல் கொடுத்து வருது. இந்த வருஷமும் இஸ்லாமாபாத்துல நடந்த பேரணியில, ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவை கடுமையா விமர்சிச்சு பேசியிருக்கார்.
இதையும் படிங்க: எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாக்.,? தொடரும் பதற்றம்.. களமிறங்கிய ராணுவம்..!
“காஷ்மீர் பிரச்சினைதான் இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்துக்கு முக்கிய காரணம். பாகிஸ்தான் ராணுவமும் மக்களும் எந்த ஆக்கிரமிப்புக்கும் உறுதியான பதிலடி கொடுக்க தயாரா இருக்காங்க. நாங்க அண்டை நாடுகளோட நட்பு வேணும்னு விரும்பறோம். மோதலுக்கு பதிலா பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமும்தான் எங்களுக்கு முக்கியம்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி, காஷ்மீர் மக்களோட விருப்பமே இந்த பிரச்சினைக்கு தீர்வு. இதுதான் எங்க வெளியுறவுக் கொள்கையோட முக்கிய அம்சம்,”னு ஷெரீப் பேசியிருக்கார். ஆனா, இந்த பேச்சு, பாகிஸ்தானோட பழைய நாடகம்னு இந்தியா பதிலடி கொடுத்திருக்கு.
இந்திய வெளியுறவு அமைச்சகம், “காஷ்மீர் இந்தியாவோட பிரிக்க முடியாத பகுதி. 370 ரத்து எங்களோட உள் விவகாரம். பாகிஸ்தான் இதுல தலையிடறது ஏத்துக்க முடியாது,”னு தெளிவா சொல்லியிருக்கு. கடந்த இரண்டு மாசத்துக்கு முன்னாடி, பஹல்காம்ல பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்துன தாக்குதல்ல 26 பேர் கொல்லப்பட்டாங்க.
இதுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமா இந்திய ராணுவம் 9 பயங்கரவாத முகாம்களை தகர்த்து, பாகிஸ்தானை பின்வாங்க வச்சது. இப்போ மறுபடியும் பூஞ்ச் பகுதியில தாக்குதல் நடந்ததா வந்த செய்தி, எல்லையில பதற்றத்தை கூட்டியிருக்கு, ஆனா இந்திய ராணுவம் இதை மறுத்து, “நிலைமை கட்டுப்பாட்டுல இருக்கு,”னு உறுதிப்படுத்தியிருக்கு.
பாகிஸ்தானோட இந்த பேச்சும், அவ்வப்போது எல்லையில அத்துமீறல்களும், காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து உயிர்ப்போட வச்சிருக்கு. ஆனா, இந்தியா இதுக்கு பதிலடி கொடுக்க தயாரா இருக்குனு ராணுவமும் அரசும் தெளிவுபடுத்தியிருக்கு.
இதையும் படிங்க: 5,500 கி.மீ-க்கு அந்த பக்கம் இருந்தாலும் தப்ப முடியாது!! அமெரிக்காவுக்கு செக் வைக்கும் புதின்..!