கேரள மாநிலம் பாலக்காடு, கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த நிமிஷா செவிலியர் படிப்பு முடித்து 2008ஆம் ஆண்டு ஏமனில் செவிலியர் பணிக்காகச் சென்றார். 2011இல் டோமி தாமஸ் என்பவரைத் திருமணம் செய்து, ஒரு குழந்தையுடன் ஏமனில் வசித்து வந்தார். இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு, நிமிஷா பிரியா, ஏமன் குடிமகனான தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். நிமிஷாவின் தொழில் முறை பங்குதாரராக இருந்த மஹ்திக்கும் நிமிஷாவுக்கும் இடையே மருத்துவமனை தொடங்கியதில் வருமான பகிர்வில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மஹ்தி நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது. பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா அவருக்கு அதிக அளவு மயக்க மருந்து செலுத்தியதால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அவரது உடல் துண்டுகளாகப்பட்டு ஒரு தண்ணீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிமிஷாவிற்கு தூக்கு தண்டனை விதித்து ஏமன் அரசு உத்தரவிட்டது. அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு பெருமளவு முயற்சித்தது. ஆனால் அந்நாட்டு தூதரகத்தோடு நெருங்கி பேச முடியாத சூழலை நிலவியது. நிஷாவை காப்பாற்ற அந்நாட்டு விதிப்படி ஒரே வழி ரத்த பணம் கொடுப்பதுதான். ஒரு குறிப்பிட்ட தொகையை, லட்சத்திலோ அல்லது கோடியில் கூட இருக்கலாம்... அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுக்கும் போது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என சொல்லப்படுகிறது. இதுவரை உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மன்னிப்பு கொடுக்காத நிலையில் நாளை நிமிஷாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
இந்த நிலையில் அவரது தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபாலிடம் கேள்வி எழுப்பிய போது, கேரள பெண்ணின் மனித உயிரைக் காப்பாற்றுவதில் யார் ஈடுபட்டாலும் வரவேற்கத்தக்கது என்றார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசின் தலைவருமாறு தாங்கள் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் கிராண்ட் முப்தி ஷேக் அபுபக்கர் அகமது காந்தபுரம் தலையிட்டதாக கூறப்படுவதாகவும் தெரிவித்தார். இருப்பினும் உயிரைக் காப்பாற்ற யார் ஈடுபட்டாலும் வரவேற்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீண்டும் காங்கிரஸ்... சீறும் விசிக... ஆட்டம் காணும் அறிவாலய கூட்டணி...!
இதையும் படிங்க: எந்த கொள்கையில் பெரியாரை ஏற்கிறீர்கள்? தமிழை சனியன் என்றதை ஏற்கிறார்களா? சீமான் சரமாரி கேள்வி!!