ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி இந்திய ராணுவனத்தினர் போல் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளது குறித்து பிரதமர் மோடிக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே தெரியும் என தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லீகார்ஜூன கார்கே புதுவெடியை கொளுத்தி போட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரசியல் சாசனம் காப்போம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உளவுத்துறையின் தோல்வியால் இந்த சம்பவம் நடந்ததாக மத்திய அரசு கூறுகிறது. உளவுத்துறையை சரியாக நடத்தாமல் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கேட்கிறேன்.?
இதையும் படிங்க: பீகார் தேர்தலுக்காக இந்தியாவையே ஏமாற்றும் மோடி..! திமுறி அடிக்கும் திமுக..!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என, பஹல்காம் சம்பவம் நடந்த நாளுக்கு மூன்று நாள் முன்பாக பிரதமர் அலுவலகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டது என, பிரபல பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. பிரதமரின் உயிர் மீது இவ்வளவு அக்கறை உள்ள உளவுத்துறைக்கு, சாதாரண மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல் போனது ஏன்? அல்லது உளவுத்துறை எச்சரிக்கைக்கு பிறகும் காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தாதது ஏன்? மத்திய அரசு என்னதான் செய்து கொண்டிருந்தது?

இப்போதும், நாட்டின் பாதுகாப்பிற்காக, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் காங்கிரஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. எங்களுக்கு நாடு தான் முதன்மையானது. நாட்டிற்கு பின் தான் மற்ற அனைத்தும். காங்கிரஸ் கட்சி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பல தியாகங்களை செய்துள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் உயிரை தியாகம் செய்தார். சோனியா காந்தி எல்லாவற்றையும் இழந்ததுடன், இரு முறை பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்தார்.

ஓபிசிக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி ராகுல்காந்தி குரல் எழுப்பி போது, அவர் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜ குற்றம் சாட்டியது. இப்போது அவர்களே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்துள்ளனர் என, மல்லிகார்ஜுன கார்கே பேசினார். பஹல்காம் விவகாரத்தில் பிரதமர் மீதும், உளவுத்துறை மீதும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மோடி ஆட்சியின் மர்மம்... சோனியாவின் 'தெரியாத' நோய் மறைந்தது எப்படி..? அதிர்ச்சி பின்னணி..!