பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பிச்சு மூணு வாரமா நடந்துக்கிட்டு இருக்கு, ஆனா முதல் நாள்ல இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில ஈடுபட்டு, பாராளுமன்றத்தை முடக்கி வைச்சிருக்காங்க. இந்த சூழல்ல, ராஜ்யசபாவுல பாதுகாப்புக்கு CISF (Central Industrial Security Force) வீரர்களை நிறுத்தியதுக்கு காங்கிரஸ் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சு, அவையை பரபரப்பாக்கி விட்டிருக்கு.
எதிர்க்கட்சி எம்பிக்கள் “எங்கள் வாக்கு, எங்கள் உரிமை”னு கோஷமெல்லாம் எழுப்பி, மகர் துவார்ல புரொட்டெஸ்ட் பண்ணாங்க. இதுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், “எதிர்க்கட்சிகள் அவையோட மாண்பை அவமதிக்கிற மாதிரி நடந்துக்குறாங்க. பாதுகாப்பு கருதி தான் CISF வீரர்களை நிறுத்தியிருக்கோம்,”னு தெளிவு படுத்தினார்.
இதுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுப்பாகி, “பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் இல்லையே! எதிர்க்கட்சிகள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி போராடும்போது, CISF-ஐ குவிக்கிறது அவமானமா இல்லையா?”னு கேள்வி எழுப்பி, துணைத் தலைவருக்கு கடிதமும் எழுதியிருக்கார்.
இதையும் படிங்க: நேரு பண்ணது தப்பா? ஜெய்சங்கர் பேசுனதுதான் கொடூரம்.. வெளுத்து வாங்கும் காங்.,

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இதை மேலும் தீவிரப்படுத்தி, “அவங்களை மார்ஷல்-னு சொன்னாலும், இவங்க எல்லாம் CISF-தான். இது பாராளுமன்றத்துக்கு அவமானம். ராஜ்யசபாவோட கட்டுப்பாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்துக்கிட்டாரா?”னு கேட்டு, அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்.
இதுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி, மத்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, “கார்கே தவறான தகவலை சொல்லி, நாட்டை ஏமாத்த பாக்குறார். எந்த வெளி ராணுவமோ, காவல்படையோ உள்ள விடலை. மார்ஷல்கள் மட்டும் தான் அவையில இருக்காங்க. எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் மூலமா பொய் பரப்புறாங்க,”னு கடுமையா விமர்சிச்சார்.
இதோட, ராஜ்யசபா தலைவர் ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சிகளை பங்கமா கலாய்ச்சு, “நான் 40 வருஷமா எதிர்க்கட்சியா இருந்தவன். அவையில எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு தெரியலையா? என்கிட்ட டியூஷன் வாங்குங்க, இன்னும் 40 வருஷத்துக்கு நீங்க எதிர்க்கட்சியாவே இருக்கப் போறீங்க,”னு கிண்டல் பண்ணி, அவையை சிரிப்பால நிரப்பினார்.
இந்த CISF விவகாரம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) பத்தின விவாதத்தை திசை திருப்பியிருக்கு. எதிர்க்கட்சிகள், “பீகார்ல 52 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கு. இது தலித், ஆதிவாசி, சிறுபான்மையினரோட வாக்குரிமையை பறிக்கிற சதி,”னு குற்றம்சாட்டி, விவாதிக்கணும்னு அடம்பிடிக்குறாங்க. ஆனா, அரசு, “SIR தேர்தல் ஆணையத்தோட வழக்கமான நடைமுறை, இதை விவாதிக்க முடியாது,”னு மறுத்து வருது. இதனால, ராஜ்யசபாவும், மக்களவையும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு, முக்கிய பில்கள் நிறைவேறாம இருக்கு.
காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, “பெண் எம்பிகளை ஆண் CISF வீரர்கள் தடுத்தது ஜனநாயகத்துக்கு எதிரானது,”னு குற்றம்சாட்டி, இந்த விவகாரத்தை “ஜனநாயகத்தின் கொலை”னு வர்ணிச்சார். ஆனா, ரிஜிஜு, “எம்பிக்கள் ஆக்ரோஷமா நடந்துக்கலைனா, மார்ஷல்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க. ஆனா, கடந்த வாரம் TMC எம்பி ஒருத்தர், AAP எம்பி மைக்ரோபோனை பயன்படுத்தி அமளி பண்ணதால, பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலா செய்யப்பட்டது,”னு தெளிவு படுத்தினார்.
இந்த மோதல், பாராளுமன்றத்தோட மாண்பையும், ஜனநாயக நடைமுறைகளையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கு. கார்கேவோட கடிதமும், நட்டாவோட கிண்டலும், இந்த விவகாரத்தை சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக்கியிருக்கு.
இதையும் படிங்க: இந்தியாவின் மனைவி பாக்., ராஜஸ்தான் எம்.பி. கருத்தால் லோக்சபாவில் சிரிப்பலை..!