கோட்டா சீனிவாச ராவ் 1944 ஜூலை 10-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் பிறந்தார். இவரது பெற்றோர் கோட்டா சிவராமய்யா மற்றும் சுபபத்மம்மா. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் நாடகங்களில் ஆர்வம் காட்டினார். நாடகக் கலையின் மீதான ஆர்வமே அவரை சினிமாவை நோக்கி இழுத்தது. கோட்டா சீனிவாச ராவ் 1970-களில் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது முதல் குறிப்பிடத்தக்க திரைப்படம் பிரதிக்ஞா. இவர் பெரும்பாலும் வில்லன், குணச்சித்திர வேடங்கள், மற்றும் காமெடி பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். அவரது தனித்துவமான உடல் மொழி, குரல், மற்றும் முகச்செய்கைகள் அவரை பார்வையாளர்களிடையே பிரபலமாக்கின.தெலுங்கு திரைப்படங்களில் இவர் நடித்த பாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை. அத்தகு ஆரம்பம், சாகர சங்கமம், அந்நமய்யா, பாகுபலி போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இவர் வில்லனாகவோ, தந்தையாகவோ, அரசியல்வாதியாகவோ, அல்லது காமெடியனாகவோ நடித்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டினார்

தமிழ் சினிமாவில் இவர் சாமி திரைப்படத்தில் ஆனந்தராஜ் என்ற பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இந்த பாத்திரம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது, குறிப்பாக "பெருமாள் பிச்சை" என்ற பெயர் இவருடன் ஒட்டிக்கொண்டது. பாட்ஷா, தாமிரபரணி, குசேலன், வேங்கை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. கோட்டா சீனிவாச ராவ் இந்தி திரைப்படங்களிலும் தோன்றினார். இந்திய சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகராகவும், அரசியல்வாதியாகவும் பணியாற்றியவர். தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் அறியப்பட்டவர். இவர் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தனது பங்களிப்பால் இந்திய சினிமாவில் மறக்க முடியாத இடத்தைப் பிடித்தவர். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீ கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் அவர்களின் மறைவால் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் அவரது சினிமா திறமை மற்றும் பல்துறைத்திறனுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என்றும் தெரிவித்தார். தனது அற்புதமான நடிப்பால் தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை அவர் கவர்ந்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். சமூக சேவையிலும் முன்னணியில் இருந்த அவர், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்க பாடுபட்டார் என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரேசிலில் பிரதமர் மோடிக்கு கிடைத்த கௌரவம்.. என்ன விருது தெரியுமா..?
இதையும் படிங்க: கானா சென்ற பிரதமர் மோடி.. உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!