கடன் மற்றும் பண பரிமாற்றத்தில் மத்திய நிதி மற்றும் அமலாக்க துறையினர் மூலம் தேடப்படும் நபர்களான லலித்மோடி, விஜய் மல்லையா இருவரும் லண்டனில் ஒரு விருந்தில் பங்கேற்றனர். இதில் 315 பேர் கலந்து கொண்டனர். பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் லலித்மோடி , விஜய் மல்லையா ஜாலியாக பாட்டு பாடி, ஆட்டம் ஆடி , அரட்டை அடித்து கொண்டிருந்தனர். இந்த படங்களை பலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்னர். இது வைரலாகி பரவி வருகிறது.
முன்னாள் ஐ.பி.எல். தலைவரான லலித் மோடி மீது நிதி முறைகேடுகள், பணமோசடிகள் மற்றும் ஐபிஎல் ஏல மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன. பத்துக்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் அவர் வழக்குகளை சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: விமானம் விபத்தான இடத்தில் கொட்டிக் கிடக்கும் தங்கம்..! அள்ள அள்ள வரும் நகைகளால் அதிர்ச்சி..!

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் 2010ல் இங்கிலாந்து நாட்டுக்கு சென்ற லலித் மோடி லண்டனில் வாழ்ந்து வருகிறார். இதே போல கிங் பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் மது ஆலை உரிமையாளர் விஜய் மல்லையா, 9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கில் சிக்கி உள்ளார். அவரும் 2016 முதல் லண்டனில் வசிக்கிறார்.
பொருளாதார குற்றங்கள் நிகழ்த்திய இவர்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து மத்திய அரசு சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் லண்டனில் லலித்மோடி தனது வீட்டில் நண்பர்களுக்கு வருடாந்திர கோடை விருந்து வைத்து மகிழ்வித்தார்.
கடந்த ஜூன் 29ல் நடந்த இந்த விருந்தில் விஜய்மல்லையா, ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ்ட் கெயில், லலித் மோடி குடும்பத்தினர், நண்பர்கள் என 310 பேர் பங்கேற்றனர். இது பற்றிய தகவல்களுடன் வீடியோவையும் லலித் மோடி வெளியிட்டார்.

அதில் லலித் மோடியும், விஜய் மல்லையாவும் சேர்ந்து பாட்டுப் பாடுகின்றனர். நண்பர்களுடன் சேர்ந்தும் லலித் மோடி பாட்டு பாடும் காட்சிகள், கிறிஸ்ட் கெய்லிடம் கிரிக்கெட் மட்டை கொடுத்து லலித் மோடி, அவரது கையெழுத்தை வாங்கும் காட்சிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது தற்போது பரவலான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தியாவில் கடுமையான நிதி மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்த இருவரும், லண்டனில் நடந்த ஒரு ஆடம்பரமான கொண்டாட்டத்தில் பாடல்களைப் பாடி மகிழ்வது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த இந்தியர்கள் பலரும் லலித் மோடி மற்றும் விஜய் மல்லையாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியர்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது போன்ற விமர்சனங்களை அவர்கள் கூறி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: முருக பக்தர்கள் மாநாட்டில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நிகிதா... உண்மையை அம்பலப்படுத்திய செல்வப்பெருந்தகை...!