பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இதை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதே போல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை அறிவித்தது.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையிடம் விசாரணையை மத்திய அரசு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவைகள் குழு எனப்படும் படையில் கமாண்டோவாகப் பணியாற்றியவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாடாளுமன்ற இரு அவைகளிலும் சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும்"என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. ரகசிய சிகிச்சை என தகவல்?
இதையும் படிங்க: திருமணம் மூலம் இந்தியாவுக்குள் வந்த 5 லட்சம் பாக். பெண்கள்.. பாஜக எம்.பி. வெளியிட்ட திடுக் தகவல்.!