மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் மகாராஜா யஷ்வந்தராவ் சிகித்சாலயா மருத்துவமனை அமைந்துள்ளது. இந்தூரை ஆண்ட ஹோல்கர் வம்சத்தின் மன்னர் மகாராஜா யஷ்வந்தராவ் ஹோல்கர் II-ன் நினைவாக நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்டு, பின்னர் நவீன மருத்துவ வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் மருத்துவத் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மருத்துவமனை, மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து செயல்படுகிறது, இது இந்தூரின் மிகப் பழமையான மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த கூட்டமைப்பு, மருத்துவ சேவைகளை மட்டுமல்லாமல், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மகாராஜா யஷ்வந்தராவ் சிகித்சாலயா மருத்துவமனை, நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், எலும்பு மருத்துவம், இதயவியல், நரம்பியல், புற்றுநோயியல் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் நவீன ஆய்வகங்கள் உள்ளன.

இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிளிகள் கடித்ததில் ஒரு குழந்தையின் விரல்களும் மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளும் காயம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளில் எலிகள் நடமாடியதும் குழந்தைகளை கடித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் நல்லகண்ணு.. நேரில் சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகார்த்திகேயன்..!!
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க மருத்துவமனை ஜன்னல்களில் இரும்பு வலைகள் மற்றும் உணவு கொண்டு வருவதைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..!!