பீகார் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் சூடு அதிகரித்து வருகிறது. தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் 'தேஜஸ்வி பிரதிக்ய பிரான்' என்ற தலைப்பில் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். வாக்காளர்களை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களை திருப்திப்படுத்த அரசியல் கட்சிகள் பல தந்திரங்களைக் கையாண்டு வருகின்றனர். இந்த சூழலில், முதல்வர் பதவிக்காக கடுமையாக முயற்சிக்கும் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் மகா கூட்டணி 'தேஜஸ்வி பிரதிக்ய பிரான்' என்ற தலைப்பில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் பீகாரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நிரந்தர அந்தஸ்து வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளார். பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுப்பதோடு, பிற வாக்குறுதிகளும் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில் பேசிய ஆர்டிஏ தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகாரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று நாட்டில் முதலிடத்தில் கொண்டு செல்வதே தங்கள் இலக்கு என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் பவன் கேடா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையும் படிங்க: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டம் குப்பைக்கு போகும்... தேஜஸ்வி யாதவ் திட்டவட்டம்...!
தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள்:
- மகா கூட்டணி ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை.
- ஜீவிகா தீதிகளுக்கு மாதம் ரூ.30,000 சம்பளத்துடன் அரசு ஊழியர்களாக நிரந்தர அந்தஸ்து.
- அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் முறைப்படுத்துதல்
- பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருதல்.
- “மை பெஹின் மான் யோஜனா”வின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 நிதி உதவி வழங்கப்படும். இது டிசம்பர் 1 முதல் செயல்படுத்தப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் ரூ.30,000 வழங்கப்படும்.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்.
- நிலம் இல்லாதவர்களுக்கு 242 கெஜம் நிலம்
- வக்ஃப் திருத்த மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டு, வக்ஃப் சொத்துக்களை வெளிப்படையான முறையில் பாதுகாக்கவும், மக்கள் நலனுக்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
- பின்தங்கிய பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடஒதுக்கீடு 20ல் இருந்து 30 ஆக அதிகரித்தது. எஸ்சி ஒதுக்கீடு 16ல் இருந்து 20 ஆக அதிகரித்தது.
- மது விலக்கிலிருந்து கள்ளு விலக்கு.
- கூட்டணி தேர்தல் அறிக்கையில் மாநிலம் முழுவதும் ஐடி பூங்காக்கள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- புத்தகயாவில் உள்ள புத்த கோவில்களை பௌத்தர்களிடம் ஒப்படைத்து அவற்றை நிர்வகித்தல்.
இதையும் படிங்க: #BREAKING: பரபரக்கும் பீகார் தேர்தல் களம்... முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!