காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாகத் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நீண்ட காலமாகவே சட்டப் போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், மேகதாது அணை திட்டத்தால் கர்நாடகாவை விடத் தமிழகத்துக்கே அதிக பயன் கிடைக்கும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் புதிய வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், "மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கே நன்மை அதிகம். இதன் மூலம் சேமிக்கப்படும் நீர் பெங்களூரு மாநகரத்தின் குடிநீர்த் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்; பாசனப் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லப்படாது. இந்த அணை கட்டப்படுவதன் மூலம் ஒட்டுமொத்தமாகத் தமிழக விவசாயிகளே அதிக அளவில் பலன் அடைவார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய 177 டிஎம்சி (TMC) நீரினைத் திறந்துவிடுவதில் கர்நாடக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒருவேளை மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகத் தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தை நாடினால், அதனைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும், எங்களது உரிமைகளுக்காகப் போராடவும் நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம் என்றும் டி.கே.சிவக்குமார் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எந்த காலத்திலும் மேகதாதுவுக்கு அனுமதி இல்லை... அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்..!!
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டத் தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சரின் இந்தத் திடீர் பேச்சு இரு மாநில அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் மீண்டும் புதிய பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அரசியல் செய்வர்! மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் சாடல்!