கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டமானது ஆகஸ்ட் 23, 2005 அன்று நிறைவேற்றப்பட்டு, 2006 பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.
இதன் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படும். அதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஆண்களுக்கு சேலை உடுத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம், நெடிசன் களின் கவனத்தை பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலம் யாத்திரை மாவட்டம் மழைத்தார் கிராமத்தை சேர்ந்த சன்னி லிங்கப்பா என்பவரின் பண்ணை அருகே கால்வாய் அமைக்கும் பணியானது நடைபெற்றது.
இதையும் படிங்க: வனப்பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்.. வடமாநிலத்தவர்கள் எட்டு பேர் கைது!

இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அரசின் என்எம்எஸ் எனும் தேசிய கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அப்போது குழுவாக நின்று கொண்டிருந்த பெண்களின் தோற்றத்தில் மாறுபாடுகளை கண்டறிந்த அதிகாரிகள், ஆய்வு செய்ததில் ஆண்கள் சிலர் சேலை அணிந்து பெண்கள் போல் வேலையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த படம் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், 100 நாள் வேலையில் முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரி வீரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த புகைப்படங்கள் வலைதளங்களில் அதிவேகமாக பகிரப்பட்டு, பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இதையும் படிங்க: வருங்கால மாப்பிள்ளையுடன் எஸ்கேப்பான மணமகளின் தாயார்… தொழிலதிபர் கதறல்..!