இந்தியாவில் யுபிஐ, நெட் பேங்கிங், வாலட் போன்ற டிஜிட்டல் கட்டமைப்புகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் மோசடி செய்பவர்களும் பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். போலி போலீஸ் அழைப்பு, டிஜிட்டல் அரெஸ்ட், ஓடிபி ஏமாற்று, ஃபிஷிங் என்று பல வகையான சூழ்ச்சிகள் நடக்கின்றன. இதனால் பலரும் சிறிய தொகையிலிருந்து பெரிய தொகை வரை இழக்க நேரிடுகிறது.
பெரும்பாலான மோசடிகளில் இழப்பு 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சிறிய மதிப்புள்ள மோசடிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்க இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதைப் பற்றி பேசும்போது, மோசடி நடந்தவர்கள் தங்கள் தவறால் அல்லது வேறு யாருடைய தூண்டுதலாலோ பணத்தை இழந்திருந்தாலும், கேள்வி கேட்காமல் உதவி செய்யப்படும் என்று தெளிவாகக் கூறினார்.

இழப்பில் 85 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் எது குறைவோ அதை வழங்குவார்கள். உதாரணமாக, ஒருவர் 30 ஆயிரம் ரூபாய் இழந்தால் 85 சதவீதம் அதாவது 25,500 ரூபாய் வர வேண்டும் ஆனால் வரம்பு 25 ஆயிரம் என்பதால் 25 ஆயிரமே கிடைக்கும். 10 ஆயிரம் இழந்தால் 85 சதவீதம் அதாவது 8,500 ரூபாய் கிடைக்கும்.இது ஒரு முறைக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் சலுகை. அதாவது ஒரே நபருக்கு வாழ்நாளில் ஒரு முறைதான் இந்த இழப்பீட்டைப் பெற முடியும்.
இதையும் படிங்க: தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு... குளித்தலை போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை..! வலுக்கும் எதிர்ப்பு..!
ஓடிபி பகிர்ந்தாலும் கூட, முதல் முறை மோசடிக்கு ஆளானவர்களுக்கு இது பொருந்தும். இது மக்களுக்கு உடனடி ஆறுதலாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2017-ல் வெளியிடப்பட்ட வாடிக்கையாளர் பொறுப்பு குறித்த வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்து புதிய வரைவு வெளியிட உள்ளனர். டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கோழிக்கோட்டில் பரபரப்பு சம்பவம்: பற்றி எரிந்த பேருந்துகள், ஆம்புலன்ஸ்..!! நடந்தது என்ன..??