இந்தியாவின் எல்லைப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கணக்கெடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை சிவில் பாதுகாப்பு பணிகளுக்கு நகர்த்துமாறும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயில் இந்திய ராணுவம் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகளை நோக்கி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகளின் புகலிடங்கள், கட்டமைப்புகள், தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் வயிற்றில் பால் வார்த்த நயினார் நாகேந்திரன்... இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...!
இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையீட்டையடுத்து, இந்தியா –பாகிஸ்தான் நாடுகள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

இருப்பினும் எல்லையில் அவ்வப்போது அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கணக்கெடுத்து, அவர்களை மக்கள் பாதுகாப்பு பணியில் சேர்க்க மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரேதசங்களில் உள்ள தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் சிவில் பாதுகாப்பு சட்டம் மற்றும் 1968ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி,சிவில் பாதுகாப்பு பிரிவை மாநில அரசுகள் உருவாக்கலாம். இதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு, முன்னாள் ராணுவ வீரர்களை இதில் சேர்க்கலாம். போர், பேரிடர் காலங்கள், இயற்கை பாதிப்புகள், ஆயுதப் புரட்சிகள், கிளர்ச்சிகளை சமாளிக்க இந்த சிவில் பாதுகாப்பு பிரிவை பயன்படுத்தலாம்.

இந்த சிவில் பாதுகாப்பு பிரிவு நாட்டில் 244 மாவட்டங்களில் தயாராக இருக்கிறது, அமைதிக் காலங்களிலும், போர்காலங்களிலும் சிவில் பாதுகாப்பு படை செயல்படும். மாவட்ட கலெக்டர்கள் இந்த சிவில் பாதுகாப்பு பிரிவுக்கு தலைவராக இருக்க வேண்டும். மாவட்டத்தில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை ஒருங்கிணைத்து, கூட்டம் நடத்தி விளக்க வேண்டும். இந்த செயல்பாடுகளை சில மாநிலங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. கேந்திர சைனிஸ் வாரியம் பதிவு செய்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தலைவிரி கோலத்தில் நடனமாடிய பெண்கள்.. அபுதாபிக்கு சென்ற அதிபர் ட்ரம்புக்கு காத்திருந்த ஷாக்..!