மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி விடுதியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நைனார் மகேந்திரன் கலந்து கொண்டார் இந்த செய்தியாளர்களை சந்தித்தபோது, நாட்டில் முதன்மையான பிரச்சனை தேசிய உணர்வு நமது நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாக மூவர்ணக் கூடிய யாத்திரை தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது .

நேற்று திருச்சியிலும் நாளை மதுரையிலும் இன்று திருப்பூர் ஆகிய பகுதிகளில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெறுகிறது. மேலும் சட்டமன்றத் தொகுதி வாரியாக மூவர்ண கொடி யாத்திரையும் நன்றி தெரிவிக்கும் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி படமும் தேசியக்கொடி மட்டுமே பங்குபெறும்.

இதையும் படிங்க: NDA கூட்டணியில் தான் தொடர்கிறோம்! அமித்ஷா அழைக்காதது வருத்தம்.. மனம் திறந்த OPS..!
இன்று மதுரை மேற்கு, கிழக்கு, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மார்க் அலுவலர்கள் வீடுகளில் ED ரெய்டு செய்து தொடர்வது குறித்த கேள்விக்கு, ED என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு அதில் தேவை இல்லாமல் ரெய்டுகள் நடைபெறாது புகார்கள் ஏதேனும் இருப்பின் அதனைத் தொடர்ந்து ரைடு குறித்த ஆலோசனைகள் நடைபெறும். குறிப்பாக தமிழக அமைச்சர்களின் வீடுகளில் வீடு குறித்த கேள்விக்கு, இதுபற்றி எனக்கு முழுமையாக தெரியாது எதனால் அந்த ரெய்டு நடைபெறுகிறது என தெரிந்த பின் பதில் கூறுகிறேன் நீங்கள் சொல்லித்தான் எனக்கே ரெய்டு நடைபெறுகிறது என தெரிகிறது.

தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக் கூறிய கருத்து குறித்துஅது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுவே எனது விருப்பமும். நாட்டு மக்கள் நலன் கருதி அந்தந்த கட்சி தலைவர்முடிவு எடுக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது தேர்தலுக்கு பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் ரொம்பவும் அவசரமாக இருக்கிறீர்கள் பொறுமையாக இருங்கள்தேர்தல் கூட்டணி குறித்து உங்களுக்கு சொல்கிறேன்.

அமித்ஷா சென்னை வருகையின் போது ஓபிஎஸ்ஐ சந்திக்க முடியாதது குறித்த கேள்விக்கு, அமித்ஷா வந்தது வேறு விஷயம் அந்த அதனால் அன்னைக்கு ஓபிஎஸ்சி சந்திக்க முடியவில்லை ஆனால் இருவருமே கூட்டணியில் உள்ளனர் இபிஎஸ்சும் சரி ஓபிஎஸ்சும் சரி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்களின் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ளது அது குறித்து ஏதும் பேச வேண்டாம் தற்போதுள்ள நிலையில் பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ளார் ஆகையால் அதை மட்டுமே பேச முடியும் என்றார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் அண்ணே தூண்டில அங்கிட்டு போடுங்க... ஆதரவாளர்கள் கொடுத்த ஐடியா...!