பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி வழக்கு. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கான போக்குவரத்து தடை விதிக்க வேண்டும் என்றால் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி வாதம்.
தமிழக அரசின் உத்தரவு சட்டவிரோதம் ரத்து செய்ய வேண்டும் மனுதாரர் தரப்பு வாதம். அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம்,மார்த்தாண்டம், விளவங்கோடு, லிபின் பொன்னுசுவாமி லீலா, என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக அரசுக்கு பின்னடைவு... இடைக்கால தடை கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!
நாங்கள் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறோம். கனிமங்கள் கேரளாவுக்கு முறையான அனுமதியுடன் கொண்டு சென்று வருகிறோம்.இதனால் ஓட்டுனர் நடத்துனர் என பலர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்த தடையால் வேலைவாய்ப்பு இலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே கனிம வள இயக்குனரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், ஆர் சக்திவேல் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வந்த்து. மனு தார்ர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி
ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொன்டு செல்ல தடை விதித்து உத்தரவிட மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை. இது போன்ற வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு உள்ளது. கனிம வள சட்ட விதிகளின்படியும் இது தவறானது 23c விதி படி சட்ட விரோத கனிம வளங்கள் மட்டுமே தடை செய்ய முடியும்.
ஏற்கனவே குஜராத் அரசு இது போன்று தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த தடையை ரத்து செய்தது ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு போக்குவரத்தை தடை செய்ய அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என உத்தரவு உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கான போக்குவரத்து தடை விதிக்க வேண்டும் என்றால் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் இந்த உத்தரவில் எந்த விதிகளையும் பின்பற்றவில்லை. எனவே இந்த உத்தரவு சட்ட விரோதமானது இதை இரத்து செய்ய வேண்டும்
அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உரிய சட்ட விதிகளை பின்பற்றி தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என வாதிட்டனர். அப்போது நீதிபதிகள் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஏற்கனவே லாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.
இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கில் அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யுங்கள் திங்கள்கிழமை இந்த மலக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: பொறுமையை சோதித்த மின்தடை..இருளில் மூழ்கிய தூங்காநகரம்.. நள்ளிரவில் கொதித்து எழுந்த மக்கள்...!