திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாக்கி மைதானத்தின் வசதிகளை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு பயிற்சி பெற்று வரும் வீரர், வீராங்கனைகளுடனும் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தினந்தோறும் காலை நேரங்களில் சத்தான உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். தற்போது இட்லி மற்றும் முட்டை மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் புரோட்டீன் போதுமான அளவில் இல்லை என்பதால், ஒரு வாரத்திற்குள் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தவெகவிற்கு கிரீன் சிக்னல்... விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொன்ன ராகவா லாரன்ஸ்...இதை கவனிச்சீங்களா?

மேலும், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தினந்தோறும் பயிற்சி பெறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர்களுக்கு காலை 3 மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்யும் மாணவர்களுக்கு 45 நிமிடம் தங்கும் விடுதியில் ஓய்வு அளிக்க பள்ளி கல்வித்துறை இடம் சிபாரிசு செய்யப்படும் என்றும் உடற்பயிற்சி கூடமும், கூடைப்பந்து அரங்கமும் முறையாக இல்லை என்றும் புதுசு புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உடற்பயிற்சி செய்துவிட்டு அசதியில் பள்ளிக்குச் சென்றால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பதால் 45 நிமிடம் பள்ளி கல்வித்துறை இடம் பேசி சிறப்பு அனுமதி வாங்கி தருவேன் என மாணவர்களுக்கு உறுதி அளித்தார்.
அதேபோல், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விளையாட்டு உபகரணங்கள் (Sports Kits) வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு அரங்கில் செயல்பட்டு வரும் மாணவியர் விடுதியையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவரைப் பார்ப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக வினர் ஏராளமானோர் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வந்துள்ளதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!