தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு என். வீராசாமியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு தி.மு.க.வுக்குள் உள்ள உறவுகள், விசுவாசம் மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்புகளை எடுத்துக்காட்டிய ஒரு முக்கியமான தருணமாகப் பார்க்கப்பட்டது.
ஆற்காடு வீராசாமி தி.மு.க.வின் நீண்டகால தொண்டரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமாவார். கருணாநிதியின் நெருங்கிய நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், கட்சியின் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியவர். அவரது மகன் கலாநிதி வீராசாமி அப்போது வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இன்று ஆற்காடு வீராசாமியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமியுடனான தனது உறவை உணர்ச்சிபூர்வமாக நினைவுகூர்ந்தார். அப்போது ஆற்றலுக்கும், கொள்கை பிடிப்புக்கும் இலக்கணம் ஆற்காடு வீரசாமி என்றார். சிறைச்சாலையில் எனக்கு அறிவுரை வழங்கியவர் ஆற்காடு வீராசாமி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!
மிசாவில் ஏற்பட்ட தழும்பு இன்றும் என் கையில் உள்ளது என்று தெரிவித்தார். ஆட்சி அவலங்கள் குறித்து வரும் செய்திகளை ஆட்சியாளர்கள் படியுங்கள் என்று தெரிவித்தார். கோட் அணிவதும், பட்டு வேட்டி அணிவதும் என்ற செய்திகளாகி கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்ற கழகம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி ரோடு மேப் ரெடி..! சட்டப்பேரவை அமர்வுக்கு முன் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!