தமிழ்நாடு சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், முதன்மை எதிர்க்கட்சியான திமுக தனது சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தை இன்று மாலை நடத்துகிறது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 6 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக சட்டப்பேரவைக் கட்சியின் கொறடா எ.வ. வேலு வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து எம்எல்ஏக்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ள சூழலில், இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் உத்திகளை மறுபரிசீலனை செய்யும் நிலையில், சட்டப்பேரவை அமர்வில் திமுக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..? மனதை வெல்ல முடியாத தலைமை... தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தும் சி. விஜயபாஸ்கர்..!
கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு எதிரான உத்திகள், அரசின் ஆரம்பகால செயல்பாடுகள் மீதான விமர்சனங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது, கூட்டணி நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தொகுதி சார்ந்த பிரச்னைகளை சட்டப்பேரவையில் எவ்வாறு திறம்பட எழுப்புவது, உண்மைகள், தரவுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு அரசைத் தாக்குவது ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: WHY SILENT CM..? ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி... கொந்தளித்த உதயநிதி..!!