பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களின் உறவினர்களின் பொறுப்பில் வளர்க்கப்படும்போது, அவர்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, ஆரோக்கியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதைத் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இத்தகைய குழந்தைகளுக்கு நிதியுதவி அளிக்கும் அன்பு கரங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது, சமூக நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படுகிறது.
திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தக் குழந்தைகளை அன்பின் கரங்களால் தழுவி, அவர்களுக்கு சமமான வாழ்க்கை வாய்ப்புகளை அளிப்பதேயாகும். இதன் மூலம், அனாதை இல்லங்கள் அல்லது தனியார் நிறுவனங்களை மட்டும் சார்ந்திருக்காமல், அரசின் அன்பான தலையீடு மூலம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்க்கும்போது, முதலாவதாக, நிதி உதவி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு, அவர்களைப் பராமரிக்கும் உறவினர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்படுகிறது. இது, குழந்தைகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. கல்வி உதவியாகவும் இது விரிவடைகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது அவர்களின் படிப்பைத் தொடர்ந்து செய்ய உதவுகிறது. இது, குழந்தைகளின் உடல், மன, கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. திட்டத்தின் கீழ், சுகாதார சேவைகள், உணவுத் திட்டங்கள் மற்றும் உளவியல் ஆதரவு போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ.22 ஆயிரம் கோடி கொள்ளை...புள்ளி விவரத்தோடு திமுகவை பொளந்தெடுத்த இபிஎஸ்

இதனால் குழந்தைகள் முழுமையான பாதுகாப்பைப் பெறுகின்றனர். இந்த அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகளுக்காக அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, குழந்தைகளின் இந்த சிரிப்புதான் பேரறிஞர் அண்ணாவுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்று தெரிவித்தார். சாமானிய மக்களின் எழுச்சிதான் திராவிட இயக்கம் என்றும் அரசியல் என்பது மக்களுக்கான பணி, கடுமையான பணி என்றும் இதில் சொகுசுவிற்கு இடமில்லை எனவும் கூறினார். அரசியல் என்பது பொறுப்பை மறந்து கவர்ச்சி திட்டத்தை அறிவிப்பது என சிலர் கருதுவதாக குறிப்பிட்டார்.
மக்களுடன் மக்களாக இருப்பதால்தான் அனைத்து தேவைகளையும் செய்ய முடிகிறது என்றும் கொரோனா தொற்று ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் ஆட்சிக்கு வந்தோம் எனவும் குறிப்பிட்டு பேசினார். கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கினோம் என்றும் காலை உணவு திட்டம் வாக்கு அரசியலுக்கானதா என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நாங்கன்னா அவ்வளவு எழக்காரமா? - திமுக கூட்டணிக்குள் புகைச்சல்... விசிக எதிர்ப்பிற்கு அடிபணிந்த ஆளும் கட்சி...!